பிக் பாஸ் வாய்ப்பு பெறும் கனி? குக் வித் கோமாளி ஸ்டார் பர்சனல்

Cook With Comali To Bigboss : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர் கனி பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Bigboss Season 5 Cook With Comali contestant Kani : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர் கனிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு  மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் 5-வது சீசன் தொடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

இந்நிலையில், தற்போது கமல் அரசியலில் தீவிரம் காட்டி வருவதால், அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில், இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே முடிந்த 4 சீசன்களிலும் விஜய் தொலைக்காட்சிக்கு தொடர்புடைய போட்டியாளர்களே அதிகம் கலந்துகொண்ட நிலையில், இந்த சீசனிலும் அதையே தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், பங்கேற்று வரும் கனி (கார்த்திகா) பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளாக கூறப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்களின் மத்தியில் தனி இடம் பிடித்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. காமெடியுடன் கலந்து சமையல் நிகழ்ச்சியான இதில், அஸ்வின் பாபா பாஸ்கர், கனி, பவித்ரா, மதுரை முத்து என பலர் போட்டியாளராக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், கோமாளிகளாக அஸ்வின், புகழ், சிவாங்கி, மணிமேகலை, பாலா ஆகியோர் கலக்கி வருகின்றனர்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் அஸ்வின் கனி பாபா பாஸ்கர் ஆகியோர் நேரடியாக இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதில் கனிக்கு (கார்த்திகா) பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் அகத்தியனின் மூத்த மகளாக இவர், மக்கள் டிவியில் ஒளிபரப்பான சொல் விளையாட்டு என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து பல டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குநர் திரு-வை திருமணம் செய்துகொண்ட இவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 2-வில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

இவரது தங்கை விஜயலட்சுமி (சென்னை 28 நாயகி) குக் வித் கோமாளி சீசன் 1-ல் கலந்துகொண்ட நிலையில், இவரது 2-வது தங்கை நிரஞ்சனா சமீபத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை திருமணம் செய்துகொண்டார். செய்திகளில் வருவதை போல ஒருவேளை கனிக்கு பிக்பாஸ் சான்ஸ் கிடைத்தால் அவரது கேரியரில் அது பெரிய திருப்புமுனையாக இருக்கும் என கருதப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil reality show cook with comali contestant kani thiru bigboss chance

Next Story
“பழங்கள் மற்றும் காய்கறிகள்தான் என்னுடைய சாய்ஸ்” – புது முல்லையின் ஸ்கின்கேர் டிப்ஸ்Pandian Stores Mullai Kavya Arivumani Skincare Tips Vijay Tv Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com