Tamil Recipe Update : உணவு தானியங்களில் ஒன்றான பச்சை பயறு ஒரு ஊட்டச்சத்து நிறைந்த முக்கிய உணவாக உள்ளது. இந்த பச்சை பயறை வேக வைத்தோ அல்லது வறுத்தோ சாப்படலாம். பச்சை பயிறை உட்கொள்ளும் போது பல வகை நன்மைகள் கிடைக்கிறது. செரிமானத்தை மேம்படுத்தயும், இதயத்தை பாதுகாக்கவும், இரத்த அழுத்தத்தை சீராக்கவும், உடல் எடையை குறைப்பதற்கும் பயன்படுகிறது. மேலும் பச்சை பயிறில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பச்சை பயறை வைத்து பல வகையான உணவுகளை தயாரிக்கலாம். அந்த வகையில் பச்சை பயறு கறி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சை பயறு – 300 கிராம்
பச்சை மிளகாய் – 3
வெங்காயம் – 3 நறுக்கியது
தக்காளி – 3 நறுக்கியது
பூண்டு – ஒரு கைபிடி
சீரகம் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
தனியா தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – 2 ஸ்பூன்
உப்பு தேவையாள அளவு
சர்க்கரை 1 ஸ்பூன்
பட்டர் – ஒரு ஸ்பூன்
செய்முறை :
முதலில் பச்சை பயரை 3 மணி நேரம் ஊறவைத்து அதனை குக்கரில் முக்கால் பாகமாக வேகவைத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். அடுத்து வாணலில் எண்ணெய் விட்டு சீரகம் பச்சை மிளகாய் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். அதன்பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதனுடன் மஞ்சள்துள், கரம் மசாலா, தனியா தூள் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி தண்ணீர் சேர்க்கவும். அநத கலவை நன்றாக சுண்டி கெட்டியாக வரும்போதும் அதனுடன் வேக வைத்து வைத்துள்ள பச்சை பயிரை சேர்த்து சர்க்கரை சிறிது நேரம் வதக்கவும். அடுத்து மல்லி இலை சேர்த்து நனறாக வதக்கி அதில் பட்டர் சேர்த்து இறக்கி விடவும். சுவையான பச்சை பயறு கறி தயார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil