இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலும் தினமும் ஒரு வேளையாவது இட்லி தோசை உணவாக உட்கொள்ளும் பழக்கம் இருந்து வருகிறது. உணவு வகையில் முக்கியமான பங்களிப்பை கொடுக்கும் இந்த உணவுகள் செய்வதற்கு அதிகம் நேரம் எடுக்காது மேலும் உடலுக்கு ஆரோக்கியமானது. ஆனால் இந்த உணவை செய்வதற்கு தேவையான மாவை அரைக்கும்போது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இதில் நகர்புறத்தில் ஒரு வாரத்திற்கு தேவையாள மாவை மொத்தமான அரைத்து வைத்துக்கொள்வது வழக்கம். அப்படி அரைக்கும் பொழுது முதல் 3 நாட்களில் புளிக்காமல் இருக்கும் மாவு அடுத்டுத்த நாட்களில் அதிக புளிப்புத்தன்மை ஏற்பட்டு சில சமையங்களில் பயன்படுத்த முடியாத நிலை உருவாகும். ஆனால் சில செயல்முறைகளை பின்பற்றி மாவு அரைக்கும்போது அவை சுமார் ஒரு வாரத்திற்கு புளி்க்காமல் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும்.
இட்லி தோசைக்கு மாவை அரைக்கும்போது, அரிசியை அதிகபட்சம் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை ஊற வைத்தால் போதும். உளுந்து ஒரு மணி நேரம் ஊற வைத்தாலே போதும். இந்த நேரத்தை தாண்டும்போது மாவு விரைவில் புள்ளிப்புத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மாவு அரைக்கும் பொழுது வேறு எந்த வேலையிலும் ஈடுபடாமல் கவனமான அரைக்க வேண்டும். அதிக நேரம் அரைக்கும்போது கிரைண்டர் சூடாகி மாவு உடனடியாக புளிக்க வாய்ப்புள்ளது.
மேலும் மாவு அரைக்கும் பொழுது ஐஸ் வாட்டர் பயன்படுத்தி அரைப்பது நல்லது. உளுந்து அரைபட அதிகபட்சம் 25 நிமிடங்கள் முதல் 30 நிமிடம் போதும்.உளுந்தை தனியே எடுத்து விட்டு அரிசியை போடும் முன் ஐஸ் வாட்டரை சிறிதளவு தெளித்து விட்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அரிசியை போட்டு அரைக்க வேண்டும். இதில் அரிசு முக்கால் பாகம் அரைந்தாலே போதுமானது. அரிசி அரைந்தவுடன் உளுந்தை அதில் சேர்த்து இரண்டும் கலக்கும்படி இறுதியாக அரைக்க வேண்டும்.
அதன்பிறகு மாவை கைகள் படாமல் தேவையான அளவிற்கு உணவிற்கு எடுத்து வைத்து விட்டு மீதமுள்ள மாவை மாவை உப்பு சேர்க்காமல், பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் காலையில் எழுந்தவுடன் வெளியில் வைத்தால் போதும். நீங்கள் இட்லி சுடுவதற்கு மாவு தேவையான பதத்திற்கு புளித்திருக்கும். இப்படி செய்யும் பொழுது ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரிட்ஜில் இருக்கும் மாவும், வெளியில் வைத்த மாவு கொஞ்சம் கூட புளிக்காது. இதில் உப்பு கலக்காத மாவை தேவையான பொழுது தோசைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil