Advertisment

பருப்பே இல்லாமல் இட்லி சாம்பார்: சிம்பிள் ரெசிபி

பருப்பே இல்லாமல் இட்லி சாம்பார் வைக்க முடியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
idly sambar recipe

பருப்பு பயன்படுத்தாத இட்லி சாம்பார்

இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் மிகவும் பாரம்பரிய உணவுகளில் ஒன்று இட்லி. அரிசி மற்றும் உளுந்து மாவை சேர்த்து புளிக்க வைத்து தயார் செய்யப்படும் இந்த இட்லிக்கு சட்னி, சாம்பார் என பலவையாக சைடுடிஷ் இருக்கும். இதற்கு சாம்பார் வைத்தாலும் அது பெரும்பாலும் பருப்பு சேர்த்துதான் வைப்பார்கள். ஆனால் பருப்பே இல்லாமல் இட்லி சாம்பார் வைக்க முடியுமா? வைக்கலாம். இந்த எளிமையாக வழியை பயன்படுத்துங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

வெங்காயம் – 4

தக்காளி 4

பச்சை மிளயாக் – 5

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

கட்டி பெருங்காயம் – சிறிதளவு

சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கடலை மாவு – 3 டீஸ்பூன்

பெருங்காய பொடி – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை – சிறிதளவு

தாளிக்க

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

சீரகம் – சிறிதளவு

வரமிளகாய் – 2

செய்முறை :

ஒரு குக்கரில், நறுக்கிய தக்காளி, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கட்டி பெருங்காயம், ஒன்னறை கப் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, 3 விசில் வரும்வரை வேக வைக்கவும். 3 விசில் வந்து குக்கர் ப்ரஷர் போனவுடன், குக்கரை திறந்து அதில் இருக்கும் தண்ணீரை தனியாக எடுத்துக்கொள்ளவும். 

அதன்பிறகு, குக்கரில் நன்றாக வெந்து இருக்கும் தக்காளி, வெங்காயம் பச்சை மிளகாய் கலவையை நன்றாக மசித்துவிடவும். அதன்பிறகு அதில் தனியாக எடுத்து வைத்திருக்கும் குக்கர் தண்ணீரை சேர்க்கவும். அதன்பிறகு ஒரு பானில், எண்ணைய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். கடுகு பொறிந்தவுடன், வரமிளகாய், கருவேப்பிலை, சேர்த்து பொறிந்தவுடன், மசித்து வைத்திருக்கும் தக்காளி வெங்காயம் கலவையை சேர்க்கவும்.

அதன்பிறகு அதில் மேற்கொண்டு 2 டம்பளர் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். அதன்பிறகு சாம்பார் பொடி மற்றும் உப்பை அதனுடன் சேர்த்துக்கொள்ளவும். இது நன்றாக கொதித்தவுடன், ஒரு கப்பில், கடலைமாவு எடுத்து நன்றாக கட்டி இல்லாமல் கரைத்து, அதில் சேர்த்துக்கொள்ளவும். நன்றாக கொதித்து வந்தவுடன், பெருங்காய பொடி மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கிவிடவும். சுவையான இட்லி சாம்பார் ரெடி.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamil Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment