ஹெல்தி ப்ளஸ் டேஸ்டி: முருங்கைக் கீரை சாம்பார் சிம்பிள் செய்முறை

Drumstick Keerai Sambar Tamil Video: சுவைக்காக மட்டுமல்ல, உடல் நலனுக்காக இதை தவிர்க்காமல் பயன்படுத்துங்கள்.

Tamil Recipe News, Drumstick Keerai Sambar Tamil Video: முருங்கைக் கீரை அளவில்லா பயன்கள் கொண்ட எளிய உணவுப் பொருள். இதில் இரும்புச் சத்து மிகுந்து இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. விட்டமின் சி மற்றும் பல தாதுச் சத்துகள் இருக்கின்றன. விலை மலிவாக அல்லது இலவசமாகவே நம் வீட்டைச் சுற்றிக் கிடைக்கும் முருங்கைக் கீரையை மிஸ் செய்ய வேண்டாம்.

முருங்கைக் கீரை உதவியால் சூப், ரசம், குழம்பு உள்ளிட்டவை செய்து பயன்படுத்த முடியும். அதேபோல காய்கறி பயன்படுத்தாமல், முருங்கைக் கீரையை வைத்து டேஸ்டியான சாம்பார் தயார் செய்யலாம். எப்படி முருங்கைக் கீரை சாம்பார் செய்வது? என இங்கு பார்க்கலாம்.

Drumstick Keerai Sambar Tamil Video: முருங்கை இலை சாம்பார்

முருங்கைக் கீரை சாம்பாருக்கு தேவையான பொருட்கள்: முருங்கைக் கீரை – 3 கையளவு, சின்ன வெங்காயம் – 100 கிராம், பூண்டு – 10 பற்கள், அரிசி – 2 டீ ஸ்பூன், துவரம் பருப்பு – 2 டீ ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, கடுகு – 1/2 டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் – காரத்திற்கு ஏற்ப, மஞ்சள் – ஒரு சிட்டிகை, உப்பு – சுவைக்கு ஏற்ப, எண்ணெய் – 25 மிலி

முருங்கைக் கீரை சாம்பார் செய்முறை :

முருங்கைக் கீரை இலைகளை ஆய்ந்து கொள்ளவும். அரிசி மற்றும் துவரம் பருப்பை சுரசுரப்பான பதத்தில் அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கொட்டி பொறிந்ததும் சின்ன வெங்காயம் சேர்க்கவும். பூண்டையும் தட்டிப்போட்டு வதக்கவும்.

பிறகு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கிண்டுங்கள். அரைத்து வைத்துள்ள பருப்பு, அரிசியில் தண்ணீர் ஒரு கிளாஸ் சேர்த்துக் கலந்து கடாயில் ஊற்றவும். பின்னர் நன்கு கொதிக்கவிடவும். பருப்பு மசியும் வாக்கில் கீரையை அலசி அதில் போடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

5 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடலாம். பின்னர் அதை கடையும் சட்டியில் கொட்டி நன்கு கடைந்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைக்கவும். கொதி நிலையை அடையும்போது அடுப்பை அணைத்து இறக்கிவிடவும். இப்போது சுவையான முருங்கைக் கீரை சாம்பார் தயார். சுவைக்காக மட்டுமல்ல, உடல் நலனுக்காக இதை தவிர்க்காமல் பயன்படுத்துங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil recipe news drumstick leaves benefits drumstick keerai sambar tamil video

Next Story
சன்டே ஸ்பெஷல்.. அட்டகாசமான சுறா புட்டு!sura puttu recipes sura puttu in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com