உறையே இல்லாமல் கெட்டித் தயிர்: வீட்டில் செய்ய எளிய வழி

வீட்டில் இருந்து கொண்டே ஆரோக்கியமான தயிர் செய்வது எப்படி.

lemon is enough: no need of yeast to prepare home made curd - எலுமிச்சை போதும்: வீட்டில் உறை இல்லாமல் கெட்டித் தயிர்

Tamil Recipe News: உடலின் வெப்பநிலை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மாறக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதற்காக அடிக்கடி நம்மால் வெளியில்  கடைகளுக்குச்  சென்று  தயிர் வாங்க முடியாது. எனவே வீட்டில் இருந்து கொண்டே ஆரோக்கியமான தயிர் செய்வது எப்படி என்று  சமையல் கலை வல்லுநர் நிஷா மதுலிகா கூறுகிறார்.

 

 

நமக்கு தேவையானவை

1 லிட்டர்- கொதிக்க வைத்த பால்
2 – பச்சை மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய்
1 – எலுமிச்சை

நீங்கள்  செய்ய வேண்டியது:

தயிர் செய்வதற்கு தேவையான முக்கிய மூலப்பொருள் ஸ்டார்டர் அல்லது ஈஸ்ட் ஆகும். முதலில் ஸ்டார்டர் செய்வது எப்படி என்று இங்கு காண்போம். ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்த பாலை எடுத்து மிதமாக  சூடாக்க வேண்டும். இப்போது 2 பச்சை அல்லது சிவப்பு மிளகாயை பாலில் தண்டுடன் இட வேண்டும். பிறகு அதில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை பிழிந்து விட வேண்டும். பின்னர் பாத்திரத்தை 10 முதல் 12 மணி நேரம் வரை மிதமான வெப்பம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும். பிறகு திறந்து  பார்த்தால் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஸ்டார்டர்  ரெடியாகி இருக்கும்.

இப்பொழுது தயிர் எப்படி செய்வது என்று  காண்போம்.  ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்த பாலை எடுத்து மிதமாக  சூடாக்க வேண்டும். பிறகு 2  டீஸ்பூன் ஸ்டார்டரை எடுத்து அதில் இட வேண்டும். பின்னர் வேறு ஒரு பாத்திரத்திற்கு பாலை மாற்ற வேண்டும். அதன் பின்  7 முதல் 8 மணி நேரம் வரை மிதமான வெப்பம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும் . இப்போது திறந்து பார்த்தால் நீங்கள் விரும்பிய ஆரோக்கியமான தயிர்  ரெடியாகி இருக்கும்.

 

View this post on Instagram

 

A post shared by Lucknow eats ???? (@zaika_lucknowi)

தயிர் செய்வதற்கு முன்பும் பின்பும்  நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

தயிர் செய்வதற்கு எப்போதுமே   கிரீம் போன்று உள்ள பாலை பயன்படுத்த வேண்டும்.
பாலைக் கொதிக்க வைத்த பின்னர்  சில நிமிடங்கள் நன்றாக ஆற வைக்க வேண்டும்.
இதில்  தண்டுடன் கூடிய  மிளகாயை எப்போதும் பயன்படுத்த வேண்டும். தண்டில் உள்ள சாறு தயிருக்கு  உள்ளார்ந்த புளிப்பு சுவையை  கொடுக்க உதவுகிறது.
இந்த தயிரின் சுவை மற்ற தயிர்களின் சுவையைக்  காட்டிலும் மாறு பட்ட ஒன்றாக இருக்கும்.
தயிர் செய்த பிறகு  புளிப்பாக மாறுவதைத் தடுக்க குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil recipe news lemon is enough no need of yeast to prepare home made curd

Next Story
புத்தாண்டு விருந்துக்கு பிறகு ஹேங்கோவரா? இது உங்களுக்கான டிப்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express