Tamil Recipe News, Murungai Keerai Rasam Tamil Video: குளிர் காலத்தில் சளி, இருமல் என தொல்லைகளுக்கு ஆளாகிறவர்கள் அதிகம். இந்த நேரத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க வேண்டியது அவசியம். எனவே அதற்கான உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது.
Advertisment
அப்படி உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வல்ல ஒரு எளிய உணவுப் பொருள், முருங்கைக் கீரை ரசம். முருங்கைக் கீரையில் இருக்கும் இரும்புச் சத்து, வழக்கமான ரசம் மூலமாகக் கிடைக்கும் எதிர்ப்பு சக்தி ஆகியன இணைந்து அற்புத பலன்களை கொடுக்கக் கூடியது முருங்கைக் கீரை ரசம்.
முருங்கைக் கீரை ரசம் சிம்பிளாக எப்படி செய்வது? என இங்கு காணலாம்.
Murungai Keerai Rasam Tamil Video: முருங்கைக் கீரை ரசம்
Advertisment
Advertisements
முருங்கைக் கீரை ரசம் வைக்கத் தேவையான பொருட்கள் :
புளித் தண்ணீர் – 1 கப், முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி, பூண்டு – 5 பற்கள், உப்பு – தேவையான அளவு, பெருங்காயம் – ஒரு டீ ஸ்பூன், சீரகம் – 1 டீ ஸ்பூன், மிளகு – 1 டீ ஸ்பூன்.
தாளிக்க: எண்ணெய் – 1 டீ ஸ்பூன், கடுகு – 1/2 டீ ஸ்பூன், சீரகம் – 1 டீ ஸ்பூன், கருவேப்பிலை- கொத்தமல்லி தேவையான அளவு.
முருங்கைக் கீரை ரசம் செய்முறை :
வாணலியில் முருங்கைக் கீரையை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி லேசாக கிண்டி வேக விடவும். வெந்ததும் அதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக மற்றொரு பாத்திரத்தில் புளித் தண்ணீரைக் கரைத்து வாசனை போகும் அளவுக்கு நன்கு கொதிக்க விடுங்கள். கொதித்ததும் கீரையைப் போட்டு அடுப்பை சிறு தீயில் வைத்து 2 நிமிடங்கள் மீண்டும் கொதிக்க விடுங்கள்.
அடுத்ததாக பெருங்காயப் பொடி , சீரகம், மிளகு, பூண்டு , ஒரு தக்காளி என சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். அதை தற்போது கொதிக்கும் கீரையில் போட்டு கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
தாளிக்க எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து பொறிய விடுங்கள். அடுத்ததாக கருவேப்பிலை சேர்த்து தாளித்து கீரை கலவையுடன் சேருங்கள். பிறகு ரசமாக பொங்கி வருவது போல் நுரை பொங்கி வரும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள். இப்போது முருங்கைக் கீரை ரசம் ரெடி.
முருங்கைக் கீரை செலவே இல்லாத, எளிதில் கிடைக்கக் கூடிய அற்புத உணவுப் பொருள். இதை தவற விடாதீர்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"