Tamil Recipe News, pazhaya soru tamil video: பழைய சோறு மகத்துவம் குறித்து லேட்டஸ்ட் ஆய்வுகள் பலவும் பக்கம் பக்கமாக பேசிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு இது மிகவும் உகந்தது என கூறுகிறார்கள். இதன் பிறகும் நம் வீட்டில் மீந்துபோன பழைய சோறை வீணாக்குவது அறிவுபூர்வ செயலாக இருக்காது.
Advertisment
அதே சமயம், அந்த பழைய சோறை அப்படியே சாப்பிட்டாக வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. அதை சற்றே சுவையைக் கூட்டி பயன்படுத்தலாம். இங்கே தரப்படுகிற முறையை செய்து பார்த்தால், பிரியாணி டேஸ்டுக்கு பழைய சோறு வரும். எப்படி என பார்க்கலாம்.
pazhaya soru tamil video: பழைய சோறு சுவையைக் கூட்டுதல்
Advertisment
Advertisements
பழைய சோறு சுவையைக் கூட்டத் தேவையான பொருட்கள்: பழைய சோறு - 3 கப், தயிர் - ஒரு கப், எலுமிச்சை சாறு - அரை மூடி, வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, கடலை பருப்பு - 1 ஸ்பூன், கடுகு - அரை ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு ஸ்பூன், உப்பு - தேவையான அளவு
பழைய சோறு சுவையைக் கூட்டும் செய்முறை:
முதலில் பழைய சோறு தண்ணீரை வடித்துவிட்டு கைகளால் நன்கு பிசைந்து கொள்ளுங்கள். அதனுடன் தயிர், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் பிசையவும். பிறகு சிறு துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு பொறிந்ததும் கடலை பருப்பு சேருங்கள். இது பொன்னிறமாக மாறியதும் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள். இந்த தாளித்த பருப்பை கிளறி வைத்துள்ள பழைய சோற்றில் கொட்டிக் கிளற வேண்டும். மணத்திற்கு கொஞ்சம் கொத்தமல்லி இலை தூவிக் கொள்ளவும். இப்போது பிரியாணி டேஸ்டில் பழைய சோறு ரெடி!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"