Recipe News: சாஃப்ட் சப்பாத்தி சீக்ரெட்... மாவு பிசைய இதை பயன்படுத்துங்க!

Tamil Recipe News: ஹோட்டல்களில் சப்பாத்தி மாவு தயார் செய்யும்போது, அதனுள் குறிப்பிட்ட அளவு எண்ணெய், வாழைப்பழம் ஆகியன சேர்க்கும் வழக்கத்தையும் சில இடங்களில் பார்க்க முடிகிறது.

Tamil Recipe News: ஹோட்டல்களில் சப்பாத்தி மாவு தயார் செய்யும்போது, அதனுள் குறிப்பிட்ட அளவு எண்ணெய், வாழைப்பழம் ஆகியன சேர்க்கும் வழக்கத்தையும் சில இடங்களில் பார்க்க முடிகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Recipe News: சாஃப்ட் சப்பாத்தி சீக்ரெட்... மாவு பிசைய இதை பயன்படுத்துங்க!

Tamil Recipe News

Recipe News In Tamil, Soft Chapati Making: சாஃப்ட் சப்பாத்தி, அனைவரும் விரும்புகிற ஒரு உணவு. அதேசமயம் சப்பாத்தி சாஃப்டாக வரவேண்டும் என்பதற்காக உடலுக்கு தீங்கு தரும் வேதிப் பொருட்கள் எதையும் சேர்க்க வேண்டியதில்லை. இயற்கையான முறையில் மிருதுவான சப்பாத்தியை தயார் செய்யலாம். அது எப்படி? என இங்கு காணலாம்.

Advertisment

சப்பாத்தி இன்று நம் வீடுகளில் தவிர்க்க முடியாத உணவாகியிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்புகிற உணவும்கூட. பேச்சிலர்கள் பலர் இதன் செய்முறை எளிது என்பதால் இதை தேர்வு செய்கிறார்கள்.

Soft Chapati Making Tamil: சாஃப்ட் சப்பாத்தி

சப்பாத்திக்கு மாவு தயார் செய்யும்போது அதில் ஒரு கப் கோதுமை மாவிற்கு இரண்டு ஸ்பூன் மைதா சேர்க்க வேண்டும். தண்ணீருக்கு பதிலாக அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் இருந்தால், அதைக் கொண்டு சப்பாத்தி மாவு பிசையலாம்.

பிறகு உப்பு, சுடு தண்ணீர் சேர்த்து கரண்டியால் கிளறவும். பின் கைகளால் மாவை நன்கு பிசைந்து கொண்டு சப்பாத்தி மாவு திரட்டும் கட்டையால் 15 நிமிடங்கள் நன்கு அடிக்கவும்.
அப்போதுதான் தண்ணீர் நன்கு உறிஞ்சப்பட்டு மாவு மிருதுவான பதத்தில் வரும். பின்னர் அரை மணி நேரம் ஈரத்துணி போட்டு ஊற வைக்கவும்.

Advertisment
Advertisements

பின் உருண்டைகளாக உருட்டி, தட்டையாக தயார் செய்யவும். தோசைக்கல் சூடானதும் திரட்டிய சப்பாத்தியை கல்லில் போட்டு இரு புறமும் பிரட்டவும். நன்கு அழுத்தும்போது சப்பாத்தி உப்பி வரும். தேவைப்பட்டால் அரை ஸ்பூன் எண்ணெய் தடவிக்கொள்ளலாம். இந்த முறையில் செய்து பாருங்கள், சாஃப்டான உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற சப்பாத்தி ரெடி!

ஹோட்டல்களில் சப்பாத்தி மாவு தயார் செய்யும்போது, அதனுள் குறிப்பிட்ட அளவு எண்ணெய், வாழைப்பழம் ஆகியன சேர்க்கும் வழக்கத்தையும் சில இடங்களில் பார்க்க முடிகிறது. இது அவசியம் இல்லை. உங்களுக்கு உகந்ததாக தோன்றினால் முயற்சித்துப் பாருங்கள்.

Tamil Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: