Tamil Recipe News, Turmeric Pepper Milk Tamil Video: எளிமையான சில உணவுப் பொருட்கள்தான் நமது உடல் நலத்திற்கு ஆகப்பெரிய நன்மை செய்பவையாக இருக்கின்றன. அவை நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் கிடைக்கும் பொருட்களாக இருக்கும். அதிக செலவு இல்லாத பொருட்களாகவும் இருக்கும். அவற்றை நாம் அலட்சியப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.
Advertisment
அப்படிப்பட்ட பொருட்கள்தான் மிளகு, மஞ்சள் ஆகியன. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த இவற்றின் பலன்கள் குறித்து இந்த கொரோனா பெருந்தொற்று நமக்கு அதிகமாகவே கற்றுக் கொடுத்திருக்கிறது. எப்போதுமே ஜலதோஷம், இருமல் இருக்கிற காலங்களில் தொண்டையில் கிருமித் தொற்று ஏற்படாமல் இருக்கவும், ஜலதோஷம் குணமாகவும் பாலில் மிளகு, மஞ்சள் கலந்து குடிப்பது நல்லது.
Turmeric Pepper Milk Tamil Video: மிளகு மஞ்சள் பால்
Advertisment
Advertisement
மிளகு மஞ்சள் பால் எப்படி தயார் செய்வது? தேவையான பொருட்கள் எவை? என்பது குறித்துப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: பால் – 2 கப், பனங்கற்கண்டு – 1 1/2 டேபிள் ஸ்பூன், மிளகுத் தூள் – 3/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சுட வைக்க வேண்டும். பால் நன்கு காய்ந்ததும் மஞ்சள் தூள், பனங்கற்கண்டு மற்றும் மிளகுத் தூளை சேர்த்து, கொதிக்க வையுங்கள். பிறகு இறக்கினால், மஞ்சள் மிளகு பால் தயார். இந்த குளிர் காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிளகு மஞ்சள் பால்.
இதில் பலர் பனங்கற்கண்டு சேர்க்காமல் சீனி சேர்ப்பதுண்டு. அது அவ்வளவு நல்லதல்ல. சிரமம் பார்க்காமல் பனங்கற்கண்டு சேர்த்தால் சுவையும் அதிகம். பலனும் முழுமையாகக் கிடைக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"