White Rice Cooking Recipe ipe Video: ரொம்ப ஈஸியா வடி சாதம் போல குக்கரிலும் உதிரியாக சாதம் சமைக்க முடியும் என்பது தெரியுமா?
Advertisment
கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது:
உலையில் சாதம் சமைக்க, முதலில் அரிசியை ஊற வைப்போம். அதேபோல குக்கர் சமையலுக்கும் முதலில் அரிசியை நன்கு ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீர் ஊற்றி அலசிக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரை அகற்றியதும் தண்ணீர் இல்லாமலேயே கைகளால் பிசைந்து கழுவுங்கள். பின் மீண்டும் தண்ணீர் பிடித்து அலசுங்கள். அந்த தண்ணீரை வடித்துவிட்டு மீண்டும் தண்ணீர் பிடித்து அலசுங்கள். இப்படி 3 முறை தண்ணீரில் அலச வேண்டும்.
Rice Cooking In Cooker Tamil Video: குக்கரில் சாதம் தமிழ் வீடியோ
Advertisment
Advertisements
அதன்பிறகு 1 டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் அளவு தண்ணீர் வைக்க வேண்டும். புதிய அரிசியாக இருப்பின் 2 1/2 டம்ளர் தண்ணீர் வைத்தால் போதுமானது. எந்த டம்ளரில் அரிசியை அளந்தீர்களோ அதே டம்ளரில்தான் தண்ணீர் வைக்க வேண்டும். குக்கரில் தண்ணீர் ஊற்றியதும் அதில் சமையல் எண்ணெய் 1 ஸ்பூன் விடுங்கள். பின் ரப்பர், பிரஷர் குக்கர் மூடி போட்டு மூடிவிட வேண்டும்.
விசில் போடாமல் மிதமான தீயில் குக்கரை அடுப்பில் வையுங்கள். குக்கரில் தண்ணீர் பிரஷர் அடிக்கும்போது விசில் போட்டு மூடுங்கள். விசில் 3 முறை சத்தம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். பின் உடனே குக்கர் மூடியை திறக்காமல் அடுப்பிலேயே விட்டுவிடுங்கள்.
பிரஷர் தானாக இறங்கிய பிறகு குக்கர் மூடியை திறக்க வேண்டும். தற்போது கரண்டியால் சாதத்தை கிளறிப்பாருங்கள். பூப்போல சாதம் வெந்திருக்கும். உலை வடி சாதம் போலவே குக்கரிலும் உதிரியாக சோறு சமைக்கும் ரகசியம் இதுதான். குக்கரில் சமைக்கும்போது தண்ணீர் அளவும், மிதமான தீயும் முக்கியம். அதுவே சாதம் நன்கு வெந்து, உதிரியாக வர உதவும். செய்து பாருங்கள் மக்களே!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"