Tamil Recipe News, White Rice Cooking Tamil Video: பேச்சிலர்கள், அதிகம் டிராவல் செய்கிறவர்கள் எப்போதும் குக்கருடன் இருக்க முடியாது. எனவே குக்கர் இல்லாமல் சாதம் சமைக்கும் முறை உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அது என்ன பெரிய விஷயமா? என நினைக்கலாம். தண்ணீர் அளவு உள்ளிட்டவற்றை நீங்கள் சரியாக வைத்தால் மட்டுமே சாதம் டேஸ்டியாக இருக்கும்.
தவிர, குக்கர் கையில் இல்லாததை குறையாக நினைக்க வேண்டாம். வடி சாதம், கூடவே சாதம் வடிநீர் தயாரித்து பருகும் வாய்ப்பு அதில் இருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள். குக்கர் இல்லாமல் வடி சாதம், சாதம் வடி நீர் எப்படி தயார் செய்வது? என இங்கு பார்க்கலாம்.
White Rice Cooking Tamil Video: சோறு சமையல் தமிழ் வீடியோ
இந்த வடி சாதம் தயார் செய்வதும்கூட கலைதான். இதிலும் நீங்கள் விருப்பம் போல தண்ணீரை அதிகமாக சேர்த்தால், சாதத்தின் சுவை பாதிக்கும். சுவையான வடி சாதம் எப்படி சமைப்பது என இங்கு பார்க்கலாம்.
வடி சாதம் சமையலுக்கு தண்ணீர் அளவு எப்படி இருக்க வேண்டும் என முதலில் பார்க்கலாம். ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் போதுமானது. அரிசி நீளமாக இருந்தால் 1 3/4 கப் தண்ணீர் வைக்கலாம். சிவப்பு அரிசியானால் 2 கப் தண்ணீர் தேவைப்படும். இந்த அளவை சரியாக பின்பற்றினால் சாதம் நன்றாக இருக்கும்.
அடுத்து அடுப்பில் தீ அளவு முக்கியம். கொதி நிலைக்கு வரும் வரை அதிக தீ இருக்கலாம். அதன்பிறகு மிதமான தீ வைக்க வேண்டும். குக்கராக இருக்கும் பட்சத்தில் மிதமான தீயே போதுமானது. தீ மிக அதிகமாக இருந்தால், சாதம் பக்குவமாக இருக்காது.
சில நேரங்களில் அரிசி பாதி வெந்தும் வேகாத நிலையில் இருக்கும். அதாவது, சில அரிசி நன்கு வெந்திருக்கும். சில வெந்திருக்காது. இதற்குக் காரணம் பாத்திரத்தை அடுப்பில் சரியாக வைக்கவில்லை என்பதே ஆகும். எனவே அடுப்பில் பாத்திரத்தை வைக்கும்போதே சரியாக சுற்றிலும் பொருந்தியுள்ளதா என கவனியுங்கள்.
சிலர் எப்படி பார்த்து சமைத்தாலும், சாதம் குழைந்து விடும். அதற்கு காரணம், அதிக தீயில் சாததை கொதிக்கவிடுவதே! அதோடு அடிக்கடி சாதத்தை கிளறிக் கொண்டிருக்கவும் தேவையில்லை. மிதமான தீயில் கிளறாமல் விட்டாலே சாதம் நன்கு வேகும்.
ஒருவேளை சாதம் குழைந்து விட்டால் உடனே ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது வெண்ணெய் விட்டு கிளறுங்கள். சாதம் உதிரியாக இருக்கும். சாதம் வடித்த பின்னரும் தண்ணீர் இருந்தால், அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற விடுங்கள். கரண்டியைக் கொண்டு கிளற வேண்டாம்.
சூப்பராக இப்படி வடி சாதம் தயார் செய்து சாப்பிடுங்கள் மக்களே! சாதம் வடி நீர் ஒரு அற்புத பானம். தவிர, வடி சாதம் ஆறிய பிறகு அதனுடன் வடிநீர் மற்றும் தண்ணீரை சேர்த்து கலந்து விடுவார்கள். மறுநாள் அது பழைய சோறுடன் கலந்த தண்ணீராக இருக்கும். அதன் டேஸ்டே தனி! உப்பு போட்ட இந்த ‘நீர்த்தண்ணீர்’ருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு.
இந்த சாதம் வடிநீருக்காகவும், நீர்த்தண்ணீருக்காகவும் குக்கரை தவிர்ப்பவர்களும் உண்டு.