பீரியட்ஸ் நேரத்தில் பெண்களுக்கு ரொம்ப நல்லது: உளுந்து குழம்பு எப்படி செய்றதுனு பாருங்க
இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, பெண்களின் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது
இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, பெண்களின் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது
My Country Foods யூடியூப் சேனல் இணையத்தில் மிகவும் பிரபலம். அதில் ஒருமுறை அவர்கள் பகிர்ந்த உளுந்து குழம்பு ரெசிபி வீடியோ மிகவும் வைரலானது. இன்று சுவையான உளுந்து குழம்பு எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்
தேங்காய்
சின்ன வெங்காயம், பூண்டு
Advertisment
Advertisements
கறுப்பு உளுந்து (கழுவி காயவைத்தது)
புளி- நெல்லிக்காய் அளவு
தக்காளி
நல்லெண்ணெய்
கடுகு, வெந்தயம்
செய்முறை
வீடியோவில் உள்ளபடி முதலில் தேங்காயை துருவிக் கொள்ளவும், சின்ன வெங்காயம், பூண்டு தோல் நீக்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் அதில் கருப்பு உளுந்து சேர்ந்து நன்கு வறுக்கவும். பிறகு, உளுந்தை வேறு பாத்திரத்துக்கு மாற்றவும். அதே கடாயில், சோம்பு, சீரகம் வறுத்து அதனுடன் தேங்காய் சேர்த்து வதக்கி அதை தனியாக வைக்கவும்.
இப்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம் சேர்க்கவும். அது பொரிந்ததும் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் தக்காளி, சிறிது கல் உப்புசேர்த்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.
வெங்காயம், பூண்டு, தக்காளி நன்கு வதங்கியதும் அதில் தேவையான அளவு குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு கரைத்து வைத்த புளித்தண்ணீரை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். இதில் கொஞ்சமாக வறுத்த உளுந்தை சேர்க்கவும்.
இப்போது வறுத்த தேங்காய், சோம்பு, சீரகம், உளுந்து அனைத்தையும் மிக்ஸியில் கெட்டியாக இல்லாமல் கொஞ்சம் தண்ணியாக கொரகொரப்பாக அரைக்கவும். குழம்பு நன்றாக கொதித்ததும் அந்த பேஸ்டை குழம்பில் சேர்க்கவும்.
உளுந்து சேர்த்ததால் அடிபிடிக்கும். எனவே அடிக்கடி கிளறி விடவும். தீயை மிதமாக வைக்கவும். குழம்பு நன்றாக கொதித்து வரும் வரை காத்திருக்கவும்.
சுவையான உளுந்து குழம்பு தயார். இது சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, பூரி என அனைத்துக்கும் பர்ஃபெக்ட் டிஷ் ஆக இருக்கும். குறிப்பாக மாதவிடாய் நேரத்தில் இந்த உளுந்து குழம்பு சாப்பிடுவது பெண்களுக்கு மிகவும் நல்லது.
பலன்கள்
உளுந்தில் நம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் B மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது வளர் இளம் பெண்களுக்கு ஏற்ற உணவாகும். இதை களி செய்து உண்பதால் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்.
இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, பெண்களின் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“