சிம்பிள் செய்முறை: சின்ன வெங்காயம் சாம்பார் எவ்ளோ நல்லது தெரியுமா?

Tamil Recipe And Benefits : நமது அண்றாட உணவில் சின்ன வெங்காயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது நமது ஆரோக்கிய வாழ்விற்கு பெரிய நன்மைகளை தரும்.

Tamil Recipe Small Onion Sambar Video : மனித உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு சிறந்த தீர்வினை தரக்கூடிய முக்கிய பொருட்களில் சின்ன வெங்காயத்திற்கு தனி இடம் உண்டு. சிறிய ஜலதோஷம், நெஞ்சு சளி என தொடங்கி, இதயம் தொடர்பான பல பிரச்னைகளுக்கு நிவாரணியாக பயன்படும் சின்னவெங்கயம் தலைமுடி வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பை கொடுக்கிறது. இதனால் நமது அண்றாட உணவில் சின்ன வெங்காயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது நமது ஆரோக்கிய வாழ்விற்கு பெரிய நன்மைகளை தரும்.

சின்ன வெங்காயம் சாம்பாரில் அளவாக சேர்க்கப்படுவது வழக்கம். ஆனால் வெங்காயத்தையை முதன்மை பொருளாக வைத்து செய்யப்படும் சாம்பாருக்கு தனி சுவையும் மணமும் அதிகம். அதிலும் இந்த சாம்பார் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை சேர்க்கும். இந்த சின்ன வெங்காயத்தை வைத்து சாம்பார் வைப்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

Small Onion Sambar Tamil Video: சின்ன வெங்காயம் சாம்பார்

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 20 (தோல் உரிக்கவும்),

புளி – எலுமிச்சைப் பழ அளவு,

தக்காளி – 1,

சாம்பார் பொடி – 2 டேபிள் ஸ்பூன்,

துவரம் பருப்பு – 100 கிராம்,

காய்ந்த மிளகாய் – 3,

கடுகு, வெந்தயம் – தலா அரை டீ ஸ்பூன்,

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

முதலில் துவரம் பருப்பை நன்றாக வேக வைத்து மசித்து கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். தக்காளி, கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயத்தை வதக்கி பின்னர், அதனுடன் தக்காளியைப் போட்டு வதக்குங்கள். தொடர்ந்து கொஞ்சம் தண்ணீர் விட்டு, கொதித்ததும் கரைத்த புளியை ஊற்றவும்.

பிறகு உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்து மசித்த பருப்பை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடுங்கள். மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். பின்னர் அவற்றை சாம்பாரில் சேர்க்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி விடுங்கள். இப்போது சுவையான உடல் நலத்திற்கு ஏற்ற சின்ன வெங்காய சாம்பார் ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil recipe small onion sambar easy way for making

Next Story
கொரோனாவிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க எளிய வழிமுறைகள் இதோ…
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com