Tamil Health Recipe Update : மருத்துவ குணங்கள் நிறைந்த இயற்கை தாவரங்களில் கருவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. முடி உதிர்வை கட்டுப்படுத்துவதில் இருந்து உடலில் ஏற்படும் பலவகையான நோய்களுக்கும் கருவேப்பிலை உன்னத மருந்தாக பயன்படுகிறது. கருவேப்பிலை பயன்படுத்தி கருவேப்பிலை சாதம், துவையல், குழம்பு, கருவேப்பிலை பொடி ஆகிய பல உணவு பொருட்களை செய்யலாம். அந்த வகையில் தற்போது கருவேப்பிலை பொடி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம்
தேவையான பொருட்கள் :
கருவேப்பிலை -250 கிராம்
வெள்ளை உளுத்தம் பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
மல்லி – 2 ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
வரமிளகாய் – 10
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு
செய்முறை :
அடுப்பில் வாணலை வைக்கவும். அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகிய இரண்டையும் சேர்த்து வறுக்கவும். அடுத்து மல்லி மற்றும் சீரகத்தை அதனுடன் சேர்க்கவும். இவை அனைத்தும் நன்றாக வறுபட்டவுடன், வரமிளகாய் சேர்க்கவும். அடுத்து கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதில் ஒரு சிட்டிகை பெருங்காயம் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும். அனைத்தும் நன்றாக வறுப்பட்டவுடன் தனியாக எடுத்து ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைக்கவும். முக்கால் பதத்தில் அரைத்து எடுத்தால் சுவையாக கருவேப்பிலை பொடி தயார். இதனை இட்லி தோசை மற்றும் சாத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil