ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பாடு என்றாலும் மாலையில் ஸ்னாக்ஸ் சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமான ஒரு விஷயம். வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மாலை வீட்டுக்கு வந்ததும், ஜாலியாக ஸ்னாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டே டிவி பார்ப்பது என பொழுதை கழிப்பார்கள். அந்த வகையில் மாலையில் சாப்பிடுவதற்கான சிறப்பான ஸ்னாக்ஸ் கார போண்டா எளிமையாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
நன்றாக புளித்த இட்லி மாவு – 2 கப்
பூண்டு – 2 பல்
பழுத்த மிளகாய் – 4
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்
ரவை – ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
கடுகு – சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
செய்முறை
முதலில் இட்லி மாலை தனியாக எடுத்துக்கொள்ளவும். பூண்டு மற்றும் பழுத்த மிளகாய் சேர்ந்து லேசாக தண்ணீர் விட்டு அரைத்து இட்லி மாவில் சேர்க்கவும். அதன்பிறகு அதில் ரவை மற்றும் அரிசி மாவை சேர்த்து நன்றாக கிளவி விடவும். அடுப்பில் ஒரு பான் வைத்து அதில் எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, நருக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கிண்டிவிடவும்.
10 நிமிடங்கள் மாவை ஊறவைத்து அதன்பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உங்களுக்கு தேவையாக சைஸில் போண்டா போட்டு பொன் நிறமாக வறுத்து எடுத்தால் சுவையாக கார போண்டா ரெடி. மாலையில் சாப்பிட ருசியான ஸ்னாக்ஸ்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“