Advertisment

இட்லி மாவில் மெதுவடை: ஈஸியா ஐந்தே நிமிடத்தில் செய்வது எப்படினு பாருங்க!

Tamil Recipe : மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களை சேர்த்து செய்யும்போது மெதுவடை மேலும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இட்லி மாவில் மெதுவடை: ஈஸியா ஐந்தே நிமிடத்தில் செய்வது எப்படினு பாருங்க!

Teasty Medhuvadai Recipe : மாலையில் பொழுதுபோக்காக ஸ்காக்ஸ் சாப்பிடுவதற்கு மெதுவடை ஒரு நல்ல உணவாக இருக்கும். உளுத்தம் பருப்பு சேர்த்து செய்யப்படும் இந்த வட பல ஆரோக்கிய நன்மைகைளயும் தருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வடை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த மெதுவடை செய்வது மிகவும் எளிது. ஆனாலும் மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களை சேர்த்து செய்யும்போது மெதுவடை மேலும் ஆரோக்கியம் நிறைந்த்தாக இருக்கும்.

Advertisment

மெதுவடை செய்வதற்கு ஒரு சில வழிமுறைகள் உள்ளன. அதில் இட்லி மாவை பயன்படுத்தி எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

இட்லி மாவு – 2 கப்

ரவை – 11/2 ஸ்பூன்

கடலை மாவு – 3 டிஸ்பூன்

மஞ்சள்தூள் – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

பேக்கிங் சோடா – சிறிதளவு

வெங்காயம் – 1 கப்

மிளகு – 2 ஸ்பூன்

கொத்தமல்லி தழை – சிறிதளவு

பச்சை மிளகாய் – 3

வெங்காய தாள் – தேவைக்கேற்ப

அரிசிமாவு – 11/2 ஸ்பூன்

செய்முறை :

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் காடாய் வைத்து எண்ணெய் சூடேற்றவும். அதன்பிறகு கையில் தண்ணீர் தொட்டு மாவை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து கையில் வைத்து தட்டி எண்ணெய்க்குள் இடவும். நன்றாக வேகும் வகையில் அதனை திருப்பிவிடவும். வடை பொன்னிறமானதும் எடுத்து விடவும். சுவையான மெதுவடை தயார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Recipe Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment