Hotel-style crispy dosa : வீட்டில் தோசை மாவு இல்லையா? கடைக்கு சென்று வாங்கவோ அல்லது ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடும் அளவிற்கு பொறுமை இல்லையா? அப்போது இருக்கவே இருக்கிறது இந்த இன்ஸ்டண்ட் ரெசிபி. வெறும் நான்கு பொருட்களை வைத்து பத்தே நிமிடங்களில் ஹோட்டலில் செய்வது போன்ற க்றிஸ்பியான மொறுமொறு தோசையை நீங்களே செய்துவிடலாம். எப்படி செய்வது என்று இங்கே பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
வெள்ளை ரவை (வறுக்காதது) - 1 கப் கோதுமை மாவு - 1/4 கப் தயிர் - 1 கப் நீர் - தேவையான அளவு சோடா உப்பு - கால் டீஸ்பூன்
மிக்ஸியில் போட்டு முக்கால் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் கால் கப் கோதுமை மாவு சேர்க்க வேண்டும். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்த பிறகு, எவ்வளவு ரவை சேர்த்தமோ, அந்த அளவிற்கு தயிர் சேர்க்க வேண்டும். நீர் சேர்த்து கட்டியில்லாமல் தோசை மாவு பதத்திற்கு கலக்க வேண்டும். சோடா உப்பு சேர்த்து, 15 நிமிடங்கள் கழித்து நீங்கள் வழக்கமாக தோசை வார்ப்பது போல் தோசை சட்டியில் தோசை வார்க்கலாம். தக்காளி தொக்கு அல்லது தேங்காய் சட்னி வைத்தால் அருமையான, சுவையான காலை அல்லது இரவு உணவு ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil