Tamil Recipe Chappathi Easy Way : உலகம் முழுவதும் பெருகி வரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மக்களின் உணவு பழக்க வழக்கங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த மாறுபட்ட உணவை சாப்பிடும்போது கூடவே பலவிதான நோய்களும் தொற்றிக்கொண்டு வருகிறது. இதனால் உலகில் தற்போது பல விதமான நோய்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கண்டறியப்பட முடியாத இன்னும பல நோய் தொற்றுகள் மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
ஆனால் உணவு பழக்க வழக்கங்கள் எவ்வளவுதான் மாறினாலும், சப்பாத்திக்கு இருக்கும் வரவேற்பு இன்னும் குறையவில்லை என்றே சொல்லாம். இந்திய துணைக்கண்டத்தில் அறிமுகமான வரலாறு கொண்ட இந்த சப்பாத்தி, இந்திய மக்களின் உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், இந்த சப்பாத்தியை சாப்பிடுவதற்கு எளிமையாக மிருதுவாக செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு -1 கப்
மைதா மாவு -2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
வடித்த கஞ்சி தண்ணீர் -தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு, 2 ஸ்பூன் மைதாவை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். சப்பாத்தி சாஃப்டாக இருக்க வேண்டும் என்றால் வடித்த கஞ்சி தண்ணீரை சிறிது சிறிதாக மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
இதில் தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெயை சேர்த்து கொள்ளலாம்.
பிசைந்த மாவின் மேல் ஈரத்துணியை கொண்டு மூடி 1 மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்த பிறகு மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.
பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடனாதும் செய்து வைத்த சப்பாத்தியை போட்டு எடுத்தால் சப்பாத்தி ரெடி.
பயன்கள்:
கோதுமையில் ஹார்போஹைட்ரேட் முழு அளவில் உள்ளதால், சப்பாத்தி சாப்பிடும்போது நாள் முழுவதும் உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் சுறுசுறுப்பாக இயங்கவும் வழி செய்கிறது.
மற்ற உணவுகளை விட சப்பாத்தியில் குறைந்த கலோரிகளக் உள்ளதால், உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சப்பாத்தியில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் அளவை குறையாமல் பார்த்துக்கெள்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"