அறுசுவை… ஆரோக்கியம்…. தக்காளி ரசம் ஈஸியா செய்வது எப்படி?

Tamil Recipe Update : எளிய முறையில் ஆரோக்கியமான ரசம் வைப்பது எப்படி என்பதை பார்க்கலாம்

Tamil Recipe Update Simple Way For Healthy Tomato Rasam : உணவு சாப்பிடும்போது செரிமானத்திற்காக ரசம் சாப்பிடுவது வழக்கம். இது செரிமானத்திற்கு மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. ரசத்தில் உள்ள மிளகு, சீரகம், பூண்டு செரிமானத்திற்கு முக்கிய சக்தியாக உள்ளது. வயிற்றை சீர் செய்து உடல் வலியை குறைக்கும். மேலும் இருமல், சளி, ஆகியவற்றை குணப்படுத்தும். பண்டைகால பாட்டி வைத்தியங்களில் ரசத்திற்கு முக்கிய பங்கு உண்டு. வெளிநாட்டினர் உணவுகளில் சூப் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், இந்தியாவின் பல பகுதிகளில் மக்களின் உணவுப்பொருட்களில், முக்கிய இடத்தை பெற்று வருகிறது.

சுவையான ரசம் வைப்பத எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள் :

தக்காளி – 6, புளி – நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் சிறிதளவு, கறிவேப்பிலை சிறிதளவு, மிளகு, சீரகம், துவரம்பருப்பு சிறிதளபு, பூண்டு 6 பல், காய்ந்த மிளகாய் 4, தனியா, கொத்தமல்லி இலை

செய்முறை :

முதலில் ஆறு தக்காளி எடுத்து, அதனை இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.  அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் வெட்டி வைத்த தக்காளி, புளி, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், கறிவேப்பிலை இலை சேர்த்து தக்காளி மற்றும் புளி சாஃப்டாக வேகும் வரை கொதிக்கவிட வேண்டும். இதற்கிடையே அடுப்பில் ஒரு கடாயை வைத்து மிளகு, சீரகம், தனியா, துவரம் பருப்பு, மிளகாய் ஆகிய சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

வறுத்த பொருட்கள் ஆறிய பிறகு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். தக்காளி நன்றாக வெந்த பிறகு அதனை மசித்து எடுத்து கொள்ளவும். இதனை மீண்டும் அடுப்பில் வைத்து நாம் அரைத்து வைத்த ரச பொடி, சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். ரசம் அதிகமாக கொதிக்க கூடாது அப்படி கொதித்தால் கசப்புத்தன்மை அதிகரிக்கும். ரசம் கொதிக்கும் முன் ஒரு தேங்காயை உடைத்து அதிலுள்ள தண்ணீரை ரசத்தில் ஊற்றினால் இனிப்பு சுவையுடன் இருக்கும். கல்யாண ரசத்தில் இந்த முறை பின்பற்றப்படும்.

அடுத்து ரசத்தை தாளிக்க தாளிப்பு கரண்டியில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், 1/4 தேக்கரண்டி பெருங்காய தூள், நசுக்கி வைத்த 6 பல் பூண்டு ஆகியவற்றை தாளித்து ரசத்தில் கொட்டி கடைசியாக ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் சிறிதளவு கொத்தமல்லி தழை தூவுங்கள். ரசம் நுரை பொங்கி வரும்போது அடுப்பை அணைத்து விடலாம். இந்த முறையில் ரசம் செய்யும்போது டேஸ்டாகவும், ஆரோக்கியமும் தரும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil recipe update healthy tomato rasam making simple way

Next Story
தண்ணீருக்குப் பதிலாக இதைச் சேருங்க… புசுபுசுன்னு சாஃப்ட் ஆப்பம் ரெடி!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com