Tamil Recipe Coconut Chatni : நாள் முழுவதும் எவ்வளவுதான் துரித உணவுகளை சாப்பிட்டாலும், பெரும்பாலான வீடுகளில் காலை உணவிற்கு நமது பாரம்பரியமான உணவுகளையே மக்கள் அதிகம் சாப்பிடுகின்றனர். இதில் பாரம்பரியமான இட்லி தோசைக்கு தனி இடம் உண்டு. இந்த உணவுக்கு பலவகையான சட்னி சாம்பார் இருக்கிறது. இதில் சாம்பார் மற்றும் சட்னி என இரண்டிற்கும் முக்கிய பங்கு வகிப்பது தேங்காய். தேங்காய் இல்லாமல் சமையலை முடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல எனறே கூறலாம்.
சமையல் அனைத்திற்கு தேங்காய் பயன்படுத்தப்பட்டாலும், இதில் கொழுப்பு அதிகம் உடலுக்கு தீங்கு என்று சிலர் கூறுவதும் உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால், உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு உள்ளது என்பதே நிரூபிக்கப்பட்ட உண்மை. மேலும் தேங்காய் சட்னி செய்தால் சீக்கிரம் கெட்டுப்போய்விடும் என்றும் கூறுவார்கள். ஆனால் இந்த முறையில் நீங்கள் தேங்காய் சட்னி செய்தால் சுவையாகவும், கூடுதல் நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும்.
அந்த வகையில் தேங்காய் சட்னி தயார் செய்வது எப்படி? என இங்கு பார்க்கலாம்.
தேங்காய் சட்னி செய்யத் தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம்பருப்பு – 2 டீ ஸ்பூன், கடலைப் பருப்பு – 3 டீ ஸ்பூன், புளி, கறிவேப்பிலை, எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.
தேங்காய் சட்னி செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை வறுக்க வேண்டும். பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வையுங்கள்.
நன்றாக ஆறியதும் அதனுடன் உப்பு, சிறிதளவு புளி சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக, நைசாக அரைத்து கொள்ள வேண்டும். இப்போது சுவையான வறுத்து அரைத்த தேங்காய் சட்னி ரெடி.
வறுத்து அரைத்த இந்த தேங்காய் சட்னி சுவையாகவும், கூடுதல் நேரம் கெட்டுப் போகாமலும் இருக்கும். இப்படி தயார் செய்து, உண்டு மகிழுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil