Tamil Recipe Upadate Venpongal : நமது உடலை நோயிலிருந்து பாதுகாக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். அதிலும் பாரம்பரியமாக உள்ள உணவுகளை எடுத்தக்கொள்ளும்போது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அந்த வகையில் தமிழகத்தில் காலை உணவாக எடுத்துக்கொள்ளப்படும் வெண்பொங்கல் அதிக நன்மைகளை கொடுக்கும். இதில் கலோரிகள் அதிகமாக உள்ளது. இதில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளால் ஆரோக்கியம் தரும் நன்மைகள் அதிகம்.
அந்த வகையில் தற்போது ஆரோக்கியமான மற்றும் சுவையாக வெண்பொங்கல் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காரணலாம்
தேவையான பொருட்கள் :
பாசி பருப்பு – ஒரு கப்
பச்சை அரிசி – ஒரு கப்
கடலை எண்ணெய்- 5 டீஸ்பூன்
கடலைப்பருப்பூ 2 அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 அரை ஸ்பூன்
தனியா – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 8
வெந்தயம் – கால் டீஸ்பூன்
பெருங்காயம் – அரை டீஸ்பூள்
நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 1
மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன்
கத்தரிக்காய் 250 கிராம்
புளி கரைசல் – 50 எம்எல்
நெய் – 100 கிராம்
மிளகு 1 கால் ஸ்பூன்
இஞ்சி – 40 கிராம்
முந்திரி – 250 கிராம்
கட்டி பெருங்காயம்
செய்முறை :
முதலில் பாசி பருப்பு மற்றும் பச்சை அரிசியை ஒன்றாக சேர்த்து நன்கு கழுவி மூன்று பாகம் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 3 விசில் விட்டு தனியாக எடுத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து ஒரு டீஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி அதில் சிறிதளவு கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு வரமிளகாய், வெந்தம், பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து பொடி செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்
அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து 2 டேபிஸ் ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி கடுகு சேர்க்கவும். தொடர்ந்து கருவேப்பில, வெங்காயம் தக்காளி, கத்தரிக்காய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து சன்றாக வதக்கவும். அதில் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்க்கவும். இவற்றை 5 ல் இருந்து 7 நிமிடங்கள் வேக வைக்கவும்.
அதன்பிறகு 100 எம்எல் புளி கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும். அதன்பிறகு முதலில் அரைத்து வைத்த அந்த மசால பொடியை 2 டீஸ்பூன் சேர்க்கவும். அடுத்து வேகவைத்த 100 கிராம் பாசிபருப்பை இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். அத்து சிறிதளவு மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
அடுத்து குக்கரில் வேக வைத்த பொங்கலை எடுத்து வைக்கவும். அதன்பிறகு கலு காடாயில் 100 கிராம் நெய் விட்டு அதில், 2 ஸ்பூன் மிளகு இஞ்சி, முந்திரி, கட்டி பெருங்காயத்தை கரைத்த கரைசல் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அடுத்து சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து எடுத்து வேகவைத்த பொங்கலில் சேர்க்கவும். சுவையாக பொங்கல் தயார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil