Tamil Recipe Video, Murungai Keerai Kanji Recipe In Tamil: முருங்கை இலை கஞ்சி, எளிமையான ஒரு உணவு. அதேசமயம், இரும்புச் சத்து மிகுந்தது. இம்யூனிட்டி எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் தரவல்ல உணவுப் பொருள் இது.
Advertisment
அதிகம் செலவில்லாத சிக்கனமான ஒரு உணவுப் பொருளும்கூட. அதனாலேயே இதை அலட்சியப்படுத்தாமல், இதில் உள்ள சத்துகளை மனதில் வைத்து அவ்வப்போது இதை உண்பது நல்லது. இந்தக் குளிர் காலத்தில் நோய்களை அண்ட விடாத முருங்கை இலை கஞ்சியை, சுவையாக செய்ய முடியும். எப்படி? எனப் பார்க்கலாம்.
Murungai Keerai Kanji Recipe In Tamil: முருங்கைக் கீரை கஞ்சி
Advertisment
Advertisements
முருங்கைக் கீரை கஞ்சி செய்யத் தேவையான பொருட்கள்: முருங்கை கீரை - 1 கப், பச்சரிசி - அரை கப், மிளகாய் தூள் - அரை டீ ஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீ ஸ்பூன், உப்பு - தேவையான அளவு
அரைக்க: தேங்காய் - கால் கப், சோம்பு - அரை டீ ஸ்பூன், சீரகம் - அரை டீ ஸ்பூன், சின்ன வெங்காயம் - 6,
முருங்கைக்கீரை கஞ்சி செய்முறை:
முதலில் பச்சரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். முருங்கை கீரையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அரைக்க கொடுத்த பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து அதில் பச்சரிசி, முருங்கைக்கீரை, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும்வரை வேக வைக்க வேண்டும். சற்று நேரம் கழித்து குக்கா மூடியை திறந்து, அரைத்த தேங்காய் கலவையை ஊற்றி கொதிக்க விடுங்கள்.
பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வேக விடவும். அனைத்தும் நன்கு கலந்து வெந்ததும், இறக்கி விடுங்கள். இப்போது சுவையான முருங்கை கீரை கஞ்சி ரெடி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"