Tamil Recipe Soft Chappathi Making : கோதுமை மாவு பல வகைகளில் நன்மை தருகிறது. இதில் சர்க்கரை நோயாளிகளுக்கு கோதுமை மாவில் செய்யப்படும் சப்பாத்தி ஒரு இன்றியமையாத உணவாக உள்ளது. ஆனால் இந்த சப்பாத்தி செய்யும் போது பலரும் பல வித அனுபங்களை பெற்றுள்ளனர் என்பது மறுக்க முடியாத ஒன்று. இதில் சப்பாத்தி மாவு பிசையும்போது சில தவறுகள் நடப்பதுண்டு. இதனால் சப்பாத்தி சாஃப்ட்டாக வராமல் மிகவும் கடினமாக இருக்கும். இதனால் சப்பாத்தியை விரும்பி சாப்பிடும் நபர்கள் கூட அதை வெறுக்கும் நிலைக்கு வந்துவிடுகினறனா.
ஆனால் சப்பாத்தி சாஃப்டாக வர என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 500 கி
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
வாழைப்பழம் – 1
உருளைக்கிழங்கு -3 வேகவைத்து மசித்தது
கொத்த மல்லி – அரைக்கட்டு
வெங்காயம் – 3
சீரக தூள் – ஒரு ஸ்பூன்
சாட் மசாலா – 1 டீஸ்பூன
செய்முறை :
முதலில் வாணலில் 200 எம்எல் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதன்பிறகு கோதுமை மாவை எடுத்து அதில் நெய், சர்க்கரை, உப்பு, வாழப்பழம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். அடுத்து தண்ணீர் கொதித்ததும் தேவைக்கேற்ப கோதுமை மாவில் ஊற்றி நன்றாக பிசையவும். கையில் ஒட்டாத அளவிற்கு நன்றாக பிசைந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஆலு பரோட செய்ய, மசித்த உருளைகிழங்கை எடுத்து அதில் கொத்தமல்லி, வெங்காயம், சாட் மசாலா, சீரகதூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். அதன்பிறகு பிசைந்து வைத்துள்ள சப்பாத்தி மாவை சிறுசிறு துண்டுகளாக எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து உருட்டி தோசை கல்லை நன்றாக காயவைத்து அதில் போடவும். அதன்பிறகு சப்பாத்தியின் இரு புறமும் எண்ணெய் விட்டு நன்றாக வேக வைத்து எடுத்தால் சாஃப்ட் சப்பாத்தி ரெடி
அடுத்து மாவை சிறுசிறு துண்டுகளாக எடுத்து அதில் உருளைக்கிழங்கு கலவையை சேர்த்து சப்பாத்தி கட்டை வைத்து நன்றாக உருட்டவும். இதில் உள்ளே வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவை வெளியில் வராமல் பார்த்துன்கொள்ள வேண்டும். அடுத்து ஒருட்டி சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டு குக்கிங் பட்டரை அதில் தடவவும். இருபுறமும் நன்றாக வெந்தவுடன் எடுத்தால் சுவையான ஆலு பரோட்ட ரொடி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil