வடலூர் வள்ளலாரின் 196 ஆவது பிறந்த நாள் இன்று!

பிறந்த நாளையொட்டி கோயில்களில் சிறப்பு பிராத்தனைகள், விஷேச பூஜைகள் நடத்தப்பட்டன. அன்னாத்தானங்களும் வழங்கப்பட்டன.

வடலூரில் வள்ளலாரின் 196 ஆவது பிறந்த நாளையொட்டி சிறப்பு பிராத்தனைகள் மற்றும் அன்னதானங்கள் நடைப்பெற்றன.

வள்லாலர் எனும் சிறப்பு பயரால் அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த நாள் இன்று. வள்ளலார் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தார். இவரின் பெற்றோர் ராமையாபிள்ளை- சின்னம்மையார் ஆவர்.

சிறு வயதிலியே தந்தையை இழந்த இவர், தனது தாயின் அரவணப்பில் வாழ்ந்தார். மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

வள்ளலார் நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார்.

இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.

வருடந்தோறும் வள்ளலாரின் பிறந்த நாள் வடலூரில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் வள்ளாலிரின் பிறந்த நாளையொட்டி கோயில்களில் சிறப்பு பிராத்தனைகள், விஷேச பூஜைகள் நடத்தப்பட்டன. அன்னாத்தானங்களும் வழங்கப்பட்டன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close