/indian-express-tamil/media/media_files/2025/08/29/tamil-serial-actress-krithika-annamalai-2025-08-29-13-08-30.jpg)
Tamil serial actress Krithika Annamalai
தொலைக்காட்சித் தொடர்களில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை கிருத்திகா அண்ணாமலை, தன் வாழ்க்கைப் பயணத்தில் பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் சந்தித்தவர். வெள்ளித்திரையில் மின்னும் நட்சத்திரமாக இருந்தாலும், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, பலருக்கும் ஊக்கமளிக்கும் ஒரு கதை.
கீருத்திகாவின் வாழ்க்கையில் ஒரு பெரிய சவாலாக இருந்தது, அவரது உடல் எடை. குழந்தை பிறந்த பிறகு அதிகரித்த எடை, அவரது தன்னம்பிக்கையை பாதித்தது. நடிப்பில் மீண்டும் வர விரும்பினாலும், உடல் எடை ஒரு தடையாக நின்றது. ஆனால், கீருத்திகா மனம் தளரவில்லை. கடுமையான உடற்பயிற்சி, முறையான உணவுப் பழக்கம், மற்றும் மன உறுதியுடன், அவர் தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
“முதல்ல 83 கிலோ இருந்தேன். நான் உடம்பு குறையணும் ஆசைப்பட்டு ஜிம்க்கு எல்லாம் போகும் போது 72 கிலோ இருந்தேன். இப்போ நான் 63 கிலோ இருக்கிறேன். 61 கிலோ வரை வந்தேன். அப்புறம் வீட்டுல எல்லாரும் ரொம்ப ஒல்லியா ஆயிட்டனு சொன்னாங்க. உன் உயரத்துக்கு 65 இருக்கலாம் சொன்னாங்க, இப்போ நான் 63 கிலோ இருக்கிறேன்.
என்னுடைய எடை குறைப்புப் பயணத்தை நான் 2017- கடைசியில தான் தொடங்கினேன். உண்மைய சொல்லணும்னா எனக்கு 11 கிலோ குறைய கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் எடுத்துகிச்சு” என்று பூரிப்புடன் கூறுகிறார் கிருத்திகா அண்ணாமலை.
கிருத்திகாவின் எடை குறைப்பு பயணம் ஒரு சில வாரங்களில் நடந்த அதிசயம் அல்ல. அது, மாதங்கள், வருடங்கள் நீடித்த அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு மற்றும் மன உறுதியின் விளைவு. அவரது இந்த ஆரோக்கியமான மாற்றம், பலருக்கும் ஒரு உந்துதலாக மாறியிருக்கிறது. அவரது பயணம், ‘கனவு காண்பது மட்டுமல்ல, அதை நிஜமாக்க கடினமாக உழைப்பதும் அவசியம்’ என்பதை நமக்கு உணர்த்துகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.