எனது காஸ்ட்லி சாரி இதுதான்... சன் குடும்ப விருது விழாவில் கட்டினேன்: சீரியல் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் கலெக்சன்ஸ்

பெண்கள் தங்கள், மகிழ்ச்சியாகவோ, சோகமாகவோ, எதிர்பார்ப்புடனோ இருக்கும்போது அதை மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையிலான கலரில் உடை அணியும் வழக்கமும் இருக்கிறது.

பெண்கள் தங்கள், மகிழ்ச்சியாகவோ, சோகமாகவோ, எதிர்பார்ப்புடனோ இருக்கும்போது அதை மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையிலான கலரில் உடை அணியும் வழக்கமும் இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sanjeev

சின்னத்திரை நடிகைகள் சீரியலில் நடிப்பதை ரசிக்கும் மக்கள் அவர்கள் அணிந்து வரும் நகைகள், புடவைகள், அவர்களின் மேக்கப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அதேபோல் சீரியல நடிகைகளும், தங்கள் பயன்படுத்தும், அழகு சாதன பொருட்கள் மற்றும் வைத்திருக்கும் சேலை மற்றும் உடைகள் கலெக்ஷன்ஸ்களை வீடியோக்களில் வெளியிடுவார்கள். அந்த வகையில் பிரபல நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் வெளியிட்டுள்ள சேலை கலெக்ஷன்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

பொதுவாக பெண்கள் தங்கள் அணியும் உடைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். குடும்பத்துடன் வெளியில் செல்லும்போதும், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்லும்போதும், அலுவலகத்திற்கு போகும்போதும் மற்றவர்களை விடவும் தான் தனியாக தெரிய வேண்டும் என்பது பல பெண்களின் முக்கிய நினைவாக உள்ளது. இதற்காக தங்கள் உடைகளை அதிகமான நேரம் ஒதுக்கி தேர்வு செய்வார்கள். இப்படி தேர்வு செய்யும் உடைகள் அனைத்தும் உண்மையில், அவர்களுக்கு திருப்தியை கொடுக்குமா என்றால், பலரின் பதில் இல்லை என்பது தான்.

அதேபோல் எவ்வளவு தான் ஒரு உடையை ஆசை ஆசையாக தேர்வு செய்து பலமுறை அணிந்தாலும், அதைவிட புதிய ட்ரெண்டிங்கில் வரும் மற்றொரு உடை கிடைக்கும்போது, பழைய உடைக்கு பெண்கள் மதிப்பு கொடுப்பது குறைவாகத்தான் இருக்கும். சில சமயங்களில், தங்களின் மனநிலையை உணர்த்தும் வகையிலும் பெண்கள் உடை அணிவார்கள். தங்கள், மகிழ்ச்சியாகவோ, சோகமாகவோ, எதிர்பார்ப்புடனோ இருக்கும்போது அதை மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையிலான கலரில் உடை அணியும் வழக்கமும் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் தனது சேலை கலெக்ஷன்கள் குறித்து வீடியோவில் கூறியுள்ளார். ஜே.எஃப்.டபிள்யூ யூடியூப் சேனலில் பேசிய அவர், சேலை என்றாலே எனக்கு ஸ்பெஷல தான். சிறு வயதில் பாட்டிகள் அமர்ந்து இதை பற்றி பேசிக்கொண்டு இருப்பார்கள். அப்போது குட்டி பசங்களாக சேலைகள் பற்றி கேட்பது அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். நான் 9-வது படிக்கம்போது அம்மா அவரது புடவையை எனக்கு கட்டிவிட்டு ஒரு பங்ஷனுக்கு அழைத்து சென்றார். பள்ளியில் ஃபேரவெல் பார்ட்டியில் நான் கட்டியது மறக்க முடியாத அனுபவம். அதேபோல் நல்லா இருக்கிறது என்ற வாங்கி பல சேலைககள் பழதாகிவிடும் என்று நான் கடடாமலே வைத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

தொடர்ந்து பேசிய அவர், நான் அதிகபட்சமாக எடுத்த சேலை எங்க அம்மாவுக்காக எடுத்தது. காஞ்சிபுரத்தில் தெரிந்தவர்கள் நெய்து கொடுத்தார்கள். இந்த புடவை ரூ38000, வெளியில் எங்கு எடுததாலும், இதன் விலை ரூ50000 இருக்கும். சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் இந்த சேலையை கட்டியிருந்தேன். இந்த சேலைகள் வாங்கும்போது நான சஞ்சீவிடம சொல்ல மாட்டேன். விலை அதிகமாக இருக்கும் என்று திட்டுவார் என்று கூறியுள்ளார்.

tamil serial Actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: