சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ராஜ். 1995-ம் ஆண்டு அக்ரஜன் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து, விஜயுடன் மாண்புமிகு மாணவன், இனி எல்லாம் சுகமே, மந்திரன், ஜேர்ரி, உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
Advertisment
தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள இவர், கடைசியாக தமிழில் இயக்கம் என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து 2009-ம் ஆண்டு சன்டிவியின் தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், துளசி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
சன்டிவியின் திருமதி செல்வம், விஜய் டிவியின் ஆபீஸ், ஜீ தமிழின் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். 2017-ம் ஆண்டு சன்டிவியின் அழகு சீரியலில், சுதா என்ற முதன்மை கேரக்டரில் நடித்து வந்தார். ரேவதி தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த சீரியல் கொரோனா தொற்றின் முதல் அலையில் நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு சீரியலில் நடிக்காத இவர், கடந்த ஆண்டு சன்டிவியில் தொடங்கப்பட்ட தாலாட்டு சீரியலில் நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்து வருகிறார். தாய் பாசத்தை அடிப்படையாக வைத்து வெளியாகிவரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஸ்ருதிராஜ் அவ்வப்போது தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்ருதி ராஜ் தனது வீட்டில் இருந்து ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ அவரின் கேரளா வீட்டில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ருதி ராஜ் வாங்கிய முதல் வீடும் இதுதான். இந்த வீட்டை கட்டும்போது அவரது அப்பா ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். அதே சமயம் துரதிஷ்டவசமாக இந்த வீட்டுக்கு குடியேறும் முன்பே அவர் இறந்துள்ளார். தொடர்ந்து வீட்டில் உள்ள அறைகள், வெளியில் உள்ள தோட்டம் என அனைத்தையும் இந்த ஹோம் டூரில் ஸ்ருதிராஜ் காட்டியுள்ளார்.
இறுதியாக, இந்த வீட்டில் குடியேறும் முன்பே, அப்பா இறந்துவிட்டாலும் நாங்கள் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்பது அவரின் ஆசை அதனால் தற்போதுவரை அவரின் நினைவுகளுடன் நாங்கள் இந்த வீட்டில் இருந்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “