விஜய் தொலைக்காட்சியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் ஜெனி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ்.. ராமநாதபுரத்தை சேர்ந்த இவர் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தில் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது புதுமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அதில் நடித்துள்ளார். பிறகு விஜேவாக சிறுது காலம் இருந்துள்ளார். முதல்முதலாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலில் மூலமாக வில்லி அவதாரம் எடுத்து அதற்கு பிறகு சுமங்கலி, கேளடி கண்மணி போன்ற தொடரிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சன் டிவி, விஜய் டிவி, என பிஸியாக நடித்து கொண்டிருந்தவருக்கு பாக்கியலட்சுமி தொடரில் நல்ல கேரக்டர் தான். இவர் இந்த சீரியலில் இனியனை காதலித்து ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு நடுவில் ரொம்பவே கஷ்டப்பட்டு திருமணம் முடித்து இருந்தாலும் தற்போது வீட்டிற்குள் இவர் செய்யும் சின்னச் சின்ன சேட்டைகளும் அனைத்து ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும் எங்கு சென்றாலும் ஜெனி என்று தான் ரசிகர்கள் அழைப்பதாகவும், அந்த அளவுக்கு பாக்கியலட்சுமி சீரியல் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது என கூறியுள்ளார்.
Advertisment
சீரியலில் சமைக்கவே தெரியதாதது போல கேரக்டர் தான் ஜெனிக்கு ஆனால் உண்மையில் அவர் நன்றாக சமைக்ககூடியவர். பார்க்க ஹீரோயின் போல் இருக்கும் திவ்யாவிற்கு பிடித்த நடிகைகள் த்ரிஷா, நயன்தாராதானாம். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது இவருடைய பழக்கம். அந்த வகையில் இவர் அதிகம் எடுத்துக்கொள்வது இளநீர், நுங்கு, காய்கறிகள் போன்றவைதான்..அந்த அளவிற்கு தனது உடலை பிட் டாக வைத்துள்ளார்.மாடன் உடைகளை மட்டுமே அதிகம் விரும்பும் காலத்தில் இவருக்கு சேலை தான் மிகவும் பிடித்தமான உடை.
மணப்பெண்ணாக திவ்யா.
சீரியல் மட்டுமின்றி ஜீவி பிராஷின் அடங்காதே, கண்ணாடி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது இந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவின் மனைவி ரோலில் திவ்யா கணேஷ் நடித்து உள்ளார். அது மிக சிறிய ரோல் தான் என்றாலும், பெரிய டீம் உடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என திவ்யா தெரிவித்துள்ளார். கிராமத்தில் ஓரு நாள் என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். இவர் சுமங்கலி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போது நடிகரும் டைரக்டருமான ஆர்கே சுரேஷ் என்பவரை காதலித்து வருவதாக கிசு கிசுக்கள் வெளியாகி இருந்தது. பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது.
Advertisment
Advertisements
இன்ஸ்டாக்ராமில் ஒன்றரை லட்சம் ரசிகர்களுக்கும் மேல் வைத்திருக்கும் திவ்யா கணேஷுக்கு இன்ஸ்டாக்ராமில் அதிக அளவு காதல் ப்ரோபோசல் வந்துகொண்டிருப்பதாக கூறுகிறார். தனது சமூக வலைதள ரசிகர்களை ஆக்டிவாக வைத்துக்கொள்ள அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சீரியலில் சேலையிலேயே வரும் திவ்யா மாடன் டிரெஸில் அப்லோடு செய்யும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சமீபத்தில் கரகாட்ட பயிற்சி பெற்று ஆடி அதன் வீடியோவை இன்ஸ்டாகிராமில் திவ்யா பதிவிட அதுவும் வைரலானது. நல்ல கேரக்டரில் மெயின் ரோலில் நடிக்க வாய்ப்புக்காக காத்திருக்கிறார் திவ்யா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“