scorecardresearch

ரெண்டு பேரும் சோ கியூட்! ஃபரினாவும், மகனும்.. மதர்ஸ் டே போட்டோஷூட் வைரல்!

சீரியல், மாடலிங், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட ஃபரினா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.

Farina Azad
Tamil Serial fame Farina Azad Mothers day special photo shoot with his son viral

சென்னையைச் சேர்ந்த ஃபரீனா ஆசாத், தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது சின்னத்திரையின் பிரபலமான கதாநாயகியாக இருக்கிறார்.

டிவியில் தொகுப்பாளராக இருந்தபோது, அஞ்சரை பெட்டி, ஒரு நிமிடம் ப்ளீஸ், கிச்சன் கலாட்டா, ஷோரீல், சினிமா ஸ்பெஷல் மற்றும் கோலிவுட் அன்கட் போன்ற நிகழ்ச்சிகளை ஃபரினா தொகுத்து வழங்கினார். பின்னர் அழகு என்ற சீரியலில் நரேஷ் ஈஸ்வருக்கு ஜோடியாக நடித்து சீரியல் உலகில் அறிமுகமானார்.

ஆனால் இவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது பாரதி கண்ணம்மா சீரியல் தான். அதில் பாரதியின் தோழியாக, டாக்டர் வெண்பாவாக வரும் இவரது கதாபாத்திரம் அவரை தமிழ் சீரியல் உலகில், நம்பிக்கைக்குரிய எதிரிகளில் ஒருவராக்கியது.

இப்படி சீரியல், மாடலிங், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட ஃபரினா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.

தன் கர்ப்பத்தை வெளி உலகத்துக்கு அறிவித்தது முதல், தான் வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு முக்கியமான கட்டத்தையும் ஃபரினா, தவறாமல் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு’ நவம்பர் 16ஆம் தேதி ஃபரினாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாய் எட்டி அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பது போல், தன்னுடைய ஒரு மாதமே ஆன குழந்தைக்கு சயன் லாரா ரஹ்மான் என பெயரிட்டு, விதவிதமாக போட்டோஷூட்கள் எடுத்து’ அதையெல்லாம் ஃபரினா இன்ஸ்டாவில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் எல்லாமே பயங்கர வைரலாகியது.

இப்போது ஃபரினா சமீபத்தில் பகிர்ந்த இன்ஸ்டா பதிவும் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

அன்னையர் தினத்தை முன்னிட்டு, பியிங் வுமன் இதழுக்காக, ஃபரினா தன் மகன் சயனுடன் சேர்த்து போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து, ”அனைத்து புதிய தாய்மார்களுக்கும் 1வது அன்னையர் தின வாழ்த்துக்கள்! ஒரு தாயாக இருப்பது மிகவும் கடினம் என்பதை நான் அறிவேன், நாங்கள் அதை மிகவும் சிரமமின்றி பார்க்கிறோம்! நம் அனைவருக்கும் பெருமை! எங்கள் புதிய உணர்வு, புதிய காதல் மற்றும் இன்னும் நிறைய அனுபவம் மற்றும் உற்சாகத்திற்கு வாழ்த்துக்கள்! இதற்கெல்லாம் நன்றி சயன், மற்றும் ரூபைத்!

குழந்தையுடன், உற்சாகமாக போஸ் கொடுக்கும் ஃபரினா போட்டோஸ் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த பலரும் ஃபரீனா நீங்கள் ஒரு கூலான மாம், அழகு, சோ கியூட், என அன்னையர் தின வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial fame farina azad mothers day special photo shoot with his son viral