Tamil Serial News: கடந்த சில வாரங்களாக டிரெண்டிங்கில் இருக்கும் சீரியல் என்றால், அது விஜய் டிவி-யின் ‘பாரதி கண்ணம்மா’ தான். வயிற்றில் வளரும் குழந்தை மேல் பாரதி சந்தேகப்பட்டு விட, சுயமரியாதையோடு நடையைக் கட்டி விட்டாள் கண்ணம்மா. அவளின் தங்கையாக நடித்து, பல வழிகளில் அக்காவை பழி வாங்க வில்லத்தனங்களை செய்பவர் அஞ்சலி.
Advertisment
பாரதி கண்ணம்மா சீரியல் அஞ்சலி
சுறுக்கமாக சொல்வதென்றால், அஞ்சலியைப் பெண் பார்க்க வரும் பாரதிக்கு, அவளது அக்கா, கண்ணாம்மாவை பிடித்துப் போக, அவளையே திருமணம் செய்துக் கொள்கிறான். பாரதியின் தம்பி அகிலுக்கு அஞ்சலியைப் பிடித்துப் போக, இது தான் நேரம் என்று கருதி, தம்பியை திருமணம் செய்துக் கொண்டு, கண்ணாம்மா வாழ்க்கையைக் கெடுத்து, பாரதியை அடைந்து விடலாம் என கணக்குப் போடுகிறாள் அஞ்சலி.
Advertisment
Advertisements
இவரின் நிஜப்பெயர் கண்மணி மனோகரன். கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்த கண்மணி, சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். இவரை வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர் ஸ்வீட்டி. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே பிற்காலத்தில் ஒரு ஈஸியான வேலையை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததாம் கண்மணிக்கு. அப்போது அவரது மனதுக்குள் உதித்தது தான் நடிப்புத் துறை. ஒரு நாள், ஆடிஷன் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பார்த்த கண்மணி, தனது புகைப்படங்களையும் டிக்டாக் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். அடுத்த நாள், பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட்டிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது.
ஹோம்லி லுக்கில் தேவதையாக கண்மணி மனோகரன்
செலக்ட் ஆவோமா மாட்டோமா என பாதி சந்தேகத்தில் அந்த ஆடிஷனில் கலந்துக் கொண்டாராம் கண்மணி. ஆனால் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள் பாரதி கண்ணம்மா குழுவினர். அந்த சீரியலின் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடிப்போம் என, கனவில் கூட யோசிக்கவில்லையாம் கண்மணி. இருப்பினும் தனது இயல்பான ஜாலி கேரக்டருக்கு கான்ட்ராஸ்டாக வில்லியாக நடிப்பதில் சில நாட்கள் சிரமம் இருந்ததாம். தற்போது பயங்கர வில்லியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
ஷூட்டிங் இல்லாத நாட்களில் தனது தோழிகளுடன் வெளியில் செல்வதும், மியூஸிக் கேட்பதும் தான் கண்மணிக்கு பிடித்தமான விஷயங்களாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”