Serial Artist Neepa: கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது நடனத்தால் அனைவரின் கவனத்தயும் ஈர்த்தவர் நீபா. விஜய் தொலைக்காட்சயில் ஒளிபரப்பான ‘கவியாஞ்சலி’ தொடர் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் பல்வேறு நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நீபா, பல்வேறு சீரியல்களிலும் படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்தார். மெளன ராகம் படத்தில் வரும், ‘பனி விழும் இரவு’ படத்தில் நடனமாடிய பெண் கலைஞரின் மகள் தான் நீபா.
டாஸ்மாக் கஸ்டமர்களுக்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு: அனைத்து கடைகளுக்கும் பாதுகாப்பு
அதோடு, சன் டிவியில் ஒளிபரப்பான ‘மஸ்தானா மஸ்தானா’ மற்றும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ போன்ற நிகழ்ச்சிகளின் டைட்டில் வின்னராகவும் புகழ் பெற்றார். இரண்டு படங்களில் டான்ஸ் மாஸ்டராவும் பணியாற்றி இருக்கிறார். காவலன் படத்தை தொடர்ந்து ‘பெருசு’, ‘பள்ளிக்கூடம்’, ‘தோட்டா’, ‘கண்ணும் கண்ணும்’, ‘அம்முவாகிய நான்’ உள்பட பல படங்களில் நடித்த இவர் 2013 ஆம் ஆண்டு தொழிலதிபர் சிவக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
நீபாவின் குடும்பம்
இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். குழந்தை பிறந்த பின்பும் ஒரு சில சீரியல்களில் தலை காண்பித்து வந்தார். ”திருமணத்திற்குப் பின்னர் என் கணவருக்கு நான் நடிப்பதில் விருப்பமில்லை. ஆனால் அவரிடம் நிறைய பேர் திறமையான ஒருவரை ஏன் இப்படி வீட்டிற்குள்ளேயே வைத்திருக்கிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்ததால், ஒரு கட்டத்தில் வாய்ப்பு வந்தால் நடிக்க என் கணவர் ஒப்புக்கொண்டார்” என பேட்டி ஒன்றிலும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “நான் மீண்டும் நடிக்க வந்தபோது ஒரு விஷயம் மட்டும் தான் நினைவிற்கு வந்தது. நீண்ட காலமாகவே கிளாமர் ரோல் செய்பவர்களை நிறைய பேர் தவறாக தான் நினைக்கிறார்கள். முன்பெல்லாம் நடிகை தனியாக இருப்பார்கள், கிளாமர் ரோல் பண்ணுவதற்கு என்று தனியாக ஒரு ஆள் இருப்பார்கள். ஆனால் இப்போது நடிகைகளே கிளாமராக நடித்து விடுகிறார்கள். இதனால் கிளாமர் ரோல் செய்ய தனியாக ஒருவர் தேவை கிடையாது. யாரையும் அவர்கள் நடிக்கும் கதாபாத்திரங்களை வைத்து விமர்சனம் செய்யாதீர்கள்.
மதுக்கடை பாதுகாப்பில் காவல்துறையை ஈடுபடுத்த முடியாது; மே 17 வரை மதுக்கடைகள் திறக்கப்படாது – பினராயி விஜயன்
நான் கிளாமர் ரோலில் நடிக்கக் காரணம் என் குடும்ப கஷ்டம் தான். என்னுடைய அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தபோது, என் கையில் காசு கிடையாது. அந்த சமயத்தில் எனக்கு கிளாமர் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. என் அப்பாவுடைய மருத்துவ செலவிற்கு உதவும் என்று தான் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன். இப்படி கிளாமராக நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் இதுபோன்ற ஒரு கதை இருக்கும். ஆனால், இது புரியாமல் தவறாக பேசுபவர்களை எண்ணித்தான், எனக்கு கஷ்டமாக இருக்கிறது” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”