Tamil Serial News: சீரியல் நடிகைகள் பலர் நடிப்பினாலும், சமூக வலைதள படங்களாலும் ரசிகர்களிடையே நெருக்கமாவார்கள். அப்படியானவர் தான் நடிகை நேகா கவுடா.
கல்யாண பரிசு சீரியலில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்கடுத்து லாக்டவுன் நேரத்தில் பல சீரியல்களில் கதாபாத்திரங்களில் மாற்றம் நிகழ்ந்தது. அப்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வர அதனை கெட்டியாக பிடித்துக் கொண்டார் நேகா.
இவர் அடிப்படையில் பெங்களூரு பொண்ணு. இவருடைய அப்பா கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆகவும் வேலை செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். நேகாவுக்கு சின்ன வயதில் இருந்தே டான்ஸ் மீது அபார காதலாம். முறைப்படி வெஸ்டன் டான்ஸ் கற்றுக்கொண்டார்.
பத்தாம் வகுப்பு படிக்கும் போதே தியேட்டர் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்திருக்கிறார் நேகா. படித்து முடித்த பிறகு தான் சினிமாவில் நுழைய வேண்டும் என வீட்டில் சொல்ல, அதன்படி சமர்த்தாக படித்தாராம். பிகாம் படிப்பை முடித்த பிறகு நடிப்பு வேட்டையை தொடங்கியிருக்கிறார். 2013-ல் ஒரு கன்னட சீரியல் தான் நேகாவுக்கு நடிப்புலக கதவை திறந்திருக்கிறது. அதற்கு பிறகு தான் கல்யாண பரிசு சீரியலில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்ததாம்.
தனது கீழுதட்டுக்குக் கீழே இருக்கிற மச்சம் தான் நேகாவின் அழகு ரகசியமாம். நிறையப் பேர் அதைச் சொல்லி புகழ்வதால், அந்த மச்சத்தின் மீது நேகாவுக்கே ஒரு தனி பெருமையும் கர்வமும் உண்டாம். பொழுது போக்கு நேரங்களில் விதவிதமான படங்களை எடுத்து, இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது தான் நேகாவுக்கு மிகவும் பிடித்த விஷயமாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Tamil serial news neha gowda kalyana parisu roja neha gowda
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி
யாராலும் தமிழக மக்களை விலைக்கு வாங்க முடியாது: ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை
அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் உரையாடல்: முகம்சுளிக்கும் பாஜக தலைவர்கள்
ஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள் : ட்விட்டரை அதிர வைக்கும் பதிவுகள்