Advertisment

ஃபோட்டோ ஷூட்டில் பிஸி: பப்ளி பியூட்டி ரக்‌ஷா ஹொல்லா!

ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்த ரக்‌ஷா, பிறகு கன்னட சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.

author-image
WebDesk
New Update
Tamil Serial News, Raksha Holla

Tamil Serial News, Raksha Holla

Raksha Holla : வட்ட முகம், புசு புசுவென பப்ளி லுக் என்றதுமே அனைவரின் நினைவுக்கும் வருபவர் நடிகை ரக்‌ஷா ஹொல்லா தான். யாரிவர் என்கிறீர்களா? விஜய் டிவி-யில் ஒளிபரப்பான, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ கடந்த சீசனில் மாயனுக்கு ஜோடியாக நடித்த தேவி தான்.

Advertisment

Tamil Serial News, Raksha Holla கணவர் ராகேஷுடன் ரக்‌ஷா

கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்ட ரக்‌ஷா, ஜனவரி 26, 1991-ல் பெங்களூரில் பிறந்தார். அவரது குடும்பம், பாரம்பரிய விவசாயக் குடும்பம். ஆனால் குழந்தைப் பருவத்திலிருந்தே நடிக்க வேண்டும் என்பது தான் ரக்‌ஷாவின் ஆசை. படிப்பை முடித்த பிறகு, தனது 22 வயதில் அவர் நடிக்கத் தொடங்கினார். இவரது உயரம் 175 செ.மீ, அதாவது கிட்டத்தட்ட 6 அடி. அதோடு நன்றாக நடனமும் ஆடுவார்.

Tamil Serial News, Raksha Holla டிரடிஷனல் லுக்

ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்த ரக்‌ஷா, பிறகு கன்னட சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். ’புட்டிண்டி பட்டு சேரா’ என்ற கன்னட சீரியல் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. அந்த சீரியலில் பிரபல நடிகர்களான ஸ்ரீ திவ்யா, யாமினி பாஸ்கர், ராமாயணம் கிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருந்தார்கள். அதன் பிறகு தமிழ் சீரியல்களில் நடிப்பதற்காக சென்னை வந்தார். இருப்பினும், ஏற்கனவே ரக்‌ஷாவுக்கு சென்னையில் சில நண்பர்கள் இருந்தார்கள்.

Tamil Serial News, Raksha Holla மழையில் நனைவதென்றால் ரக்‌ஷாவுக்கு ரொம்பவும் பிடிக்குமாம்

இதற்கு முன்பு, ‘வம்சம்’, ‘தமிழ் கடவுள் முருகன்’ ஆகிய தமிழ் சீரியல்களிலும் ரக்‌ஷா நடித்துள்ளார். தனது குழந்தை பருவ நண்பரான ராகேஷை, ரக்‌ஷா கரம் பிடித்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தேவி என்ற டாக்டராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார் ரக்‌ஷா. ஆனால் கொரோனா லாக்டவுன் நேரத்தில் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டன. அதில் ரக்‌ஷா நடித்துக் கொண்டிருந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலும் ஒன்று.

Tamil Serial News, Raksha Holla மாடலிங் நேர த்ரோபேக் படம்

தற்போது ஃபோட்டோ ஷூட்களில் கவனம் செலுத்தி வருகிறார். உணவுப் பிரியையான ரக்‌ஷாவுக்கு, சிக்கன் என்றால் கொள்ளை பிரியமாம். நடிகை குஷ்பூவின் தீவிர விசிறியான ரக்‌ஷாவுக்கு, ப்ளூ கலர் தான் ஃபேவரிட்! அதோடு நேரம் கிடைக்கும் போதெல்லாம், கணவருடன் ஊர் சுற்றுவதும் இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment