scorecardresearch

’மேக்கப் போடுறதுனா கொள்ளை இஷ்டம்’ வில்லி நடிகை நிவிஷா!

சீரியல்களில் தனக்கு வந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் நெகட்டிவாக இருந்ததால், பெரும் வருத்தத்துக்கு ஆளாகியிருக்கிறார் நிவிஷா.

Tamil Serial News, Serial Actress Nivisha
Tamil Serial News, Serial Actress Nivisha

Tamil Serial News: சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு நிகராக வில்லிகளும் ரசிகர்களின் அன்பை பெறுவார்கள். அந்த பட்டியலில் நிவிஷாவும் ஒருவர்.

முதலில் சினிமாவில் அறிமுகமான இவர், சரியான கதாபாத்திரங்கள் அமையாததால், சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். ’ஓவியா’, ‘ஈரமான ரோஜாவே’ ஆகிய சீரியல்களில் தனது வில்லத்தனமான நடிப்பால், ரசிகர்களை பார்வையாலேயே மிரட்டினார்.

Tamil Serial News, Serial Actress Nivisha
நிவிஷா

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி தான் நிவிஷாவின் சொந்த ஊர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். குடும்பத்துக்கும் ஒரே பெண். அவர்கள் குடும்பத்துக்கு மீடியா, சினிமா இதெல்லாம் பழக்கம் கிடையாதாம். ஆனால் சின்ன வயதில் இருந்தே மேக்கப் போடுவது என்றால் நிவிஷாவுக்கு பிடித்தமான விஷயமாம். இதனால் கல்லூரியில் படிக்கும் போது நிறைய குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது நிவிஷாவுக்கு.பின்னர் அதுவே சினிமா ஆசையாக மாறியிருக்கிறது. ஆனால் சினிமாவில் நுழைந்தவருக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Tamil Serial News, Serial Actress Nivisha
அழகு வில்லி

இதைத் தொடர்ந்து, நிவிஷாவுக்கு சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனாலும் இதெல்லாம் நிவிஷாவின் குடும்பத்தினருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லையாம். குறிப்பாக அவரின் பாட்டிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். ஆனாலும் தனக்கு நடிப்பு தான் உயிர் என்பதால், தடைகளை தகர்த்து சாதிக்கக் காத்திருக்கிறாராம் நிவிஷா.

Tamil Serial News, Serial Actress Nivisha
சீரியல் நடிகை நிவிஷா

ஆனால் சீரியல்களில் தனக்கு வந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் நெகட்டிவாக இருந்ததால், பெரும் வருத்தத்துக்கு ஆளாகியிருக்கிறார் நிவிஷா. ‘உன்னுடைய உயரமான , கம்பீரமான’ தோற்றத்துக்கு வில்லி கதாபாத்திரம் தான் நல்ல இருக்கும்ன்னு சொன்ன இயக்குநர்கள், ”மக்கள் மத்தியிலேயும் நீ சீக்கிரம் பிரபலம் ஆயிடுவே” என்றார்களாம். ஈரமான ரோஜாவே, ஓவியா சீரியல்களில் பாஸிட்டிவ் கதாபாத்திரம் என்று கூறிவிட்டு, போகப்போக படு வில்லியாக மாற்றியதை, நிவியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையாம். அதனால் தற்போது நல்ல பாஸிட்டிவ் கதாபாத்திரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார் நிவிஷா.

Tamil Serial News, Serial Actress Nivisha
ரெட் ஹாட் நிவிஷா

தற்போது டிக் டாக் தடை செய்யப்பட்டதால் தன்னுடைய முழு கவனத்தையும் இன்ஸ்டாகிராமில் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். விதவிதமான ஆடைகளோடும், கலக்கலான மேக்கப்போடும் படங்களை எடுத்து, அதை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார். சேலை, மாடர்ன் உடை என எல்லாவற்றிலும் ரசிகர்களின் மனதை கவர்கிறார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial news serial actress nivisha oviya serial eeramana rojave