Tamil Serial News: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மிகவும் பிரபலமானது ரோஜா. இத்தொடரில் சிபு சூரியன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா நடிக்கிறார். இதில் முக்கியமான வில்லி கதாபாத்திரத்தில் அனுவாக அலற விட்டுக் கொண்டிருக்கிறார் ஷாமிலி சுகுமார். 600 எபிசோட்களைக் கடந்து ரோஜா சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
லைட் மேக்கப்பில் ஷாமிலி
சீரியலில் ஸ்ட்ராங் வில்லியாக ரசிகர்களிடம் எதிர்ப்பையும், நடிப்பில் ஸ்கோரையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார் ஷாமிலி சுகுமார். சென்னையில் பிறந்து வளர்ந்த ஷாமிலி, சின்னத்திரையில் நுழைந்து குறுகிய வருடங்களில் 20 சீரியலுக்கு மேல் நடித்து உள்ளார். சீரியல்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்து எடுத்து நடித்து ரசிகர்களிடம் பாப்புலராகியிருக்கிறார்.
டிரடிஷனல் தேவதை
ஷாமிலி முதன் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தின் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானார். முதல் சீரியலிலேயே இவருக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வாணி ராணி, பொன்னூஞ்சல், பாசமலர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
எம்.பி.ஏ படிப்பை முடித்த, ஷாமிலிக்கு, காமெடி, டான்ஸிங், சிங்கிங் என பிடித்தவைகள் ஏராளம். சன் குடும்ப விருது விழாவில், சிறந்த வில்லிக்கான விருதைப் பெற்ற ஷாமிலி, ‘எங்கம்மா என் கூட நடிக்கிறவங்க எல்லாரையும் பாராட்டுவாங்க. ஆனா ஒருநாள் கூட நான் நல்லா நடிச்சேன்னு சொன்னதே இல்ல. இந்த விருதை அவங்க ஏத்துக்குவாங்களான்னு தெரியாது’ என்றவாறு அழுதார். அப்போது அரங்கில் இருந்தவர்களின் கண்களும் கலங்கின.
ஷாமிலி சுகுமார்
முன்பு ஒரு நேர்க்காணலில், ”என் வீட்டில் யாருமே மீடியாவுல இல்லை. எட்டாவது படிக்கிறப்போவே நான் ஒரு லோக்கல் சேனலில் காம்பியரிங் செய்திருக்கேன். அதுதான் என் முதல் அனுபவம். அதுக்கு அப்புறம் காலேஜ் படிச்சுட்டிருந்தப்போ அக்கா ஒருநாள், ‘நீ ஏன் மாடலிங் பண்ணக் கூடாது?’னு கேட்டு என்னை உற்சாகப்படுத்தினா. அப்போ ஒரு வாய்ப்பும் வந்தது. ஜவுளிக்கடைக்கான விளம்பரம் அது. அந்த விளம்பரத்தைப் பார்த்துட்டு தான் ‘தென்றல்’ சீரியலில் கூப்பிட்டாங்க. அதுதான் எனக்கு முதல் சீரியல். படிச்சிருந்தாலும் இந்த ஃபீல்டு பிடிச்சுப்போனதால இதையே கன்டினியூ பண்ண ஆரம்பிச்சுட்டேன்.
தனது செல்லப்பிராணியுடன்
நடிப்புல முழுமையா இறங்கிறதுக்கு முன்னாடி, குட்டிக்குட்டியா நிறைய ஷார்ட் ஃபிலிம்ஸில் நடிச்சிருக்கேன்” என்ற ஷாமிலி, அப்போ கிடைச்ச அனுபவங்கள்தான், ‘இந்தப் பொண்ணு நல்லா நடிக்கிறாங்களே’னு சீரியல் முதல் நாளே இயக்குநர்கிட்ட நல்ல பேரும் வாங்க உதவியா இருந்துச்சு” என மகிழ்ச்சியானார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”