Tamil Serial News: தமிழ் சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் விரைவிலேயே ரசிகர்கள் மனதில் தங்களுக்கென ஓரிடத்தைப் பிடித்து விடுவார்கள். முன்னணி தொலைக்காட்சிகளில் வாரம் ஆறு நாட்கள் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதால், அதில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களுடன் எளிதாக கனெக்ட் ஆகிறார்கள். அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் ஸ்பூர்த்தி கெளடா.
குட்டி கவுனில் குழந்தை தனம் மாறாமல்
சன் டிவி-யில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘கல்யாண வீடு’. இதனை இயக்குநர் திருமுருகன் இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஸ்பூர்த்தி கெளடா. கடந்த 2018 முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இதில் கோபியாக நடித்த திருமுருகனுக்கு ஜோடியாக, சூர்யா கதிரேசனாக நடித்திருந்தார். தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதால் தான் சீரியலில் இருந்து விலகியதாக கூறிய ஸ்பூர்த்தி, சிறிது காலம் ஒய்வு எடுத்துவிட்டு மீண்டும் சீரியலுக்கு திரும்ப போகிறேன், என்றும் கூறினார்.
ஸ்பூர்த்திக்கு கறுப்பு மிகவும் பிடித்த நிறமாம்...
1994 ஜூன் 29-ம் தேதி, கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தார் ஸ்பூர்த்தி. பெங்களூரில் உள்ள ஆர்.என்.எஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இளங்கலை பட்டம் பெற்ற இவர் முதன் முதலில் கன்னட சீரியலில் அறிமுகமானார். ரவி பசப்பனா டோடி இயக்கி, பிக்சல் பிக்சர்ஸ் தயாரித்து, ரேகா ராவ் நடித்த “துளசிதலா” சீரியல் தான் ஸ்பூர்த்தியின் முதல் சீரியல்.
வருங்கால கணவருடன்...
சூப்பர் கபடி, சாம்பியன் மற்றும் சூப்பர் மினிட் போன்ற சில பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். ஸ்பூர்த்தி கவுடா தற்போது கல்யாணா வீடு சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் திருமுருகனுடன் சன் டிவியில் நடிக்கிறார். அதோடு, சூப்பர் கபடி, சாம்பியன் மற்றும் சூப்பர் மினிட் போன்ற சில பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். பின்னர் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், கல்யாணா வீடு சீரியல் மூலம் தமிழுக்கும் அறிமுகமானார்.
க்யூட் ஸ்மைலுடன்...
சீரியல்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில், அழுது வடியும் மூஞ்சியுடன் நடித்துக் கொண்டிருந்த ஸ்பூர்த்தி, லாக்டவுன் நேரத்தில் மார்டன் உடைகளில் விதவிதமான படங்களை வெளியிட்டு வந்தார். சேலையில் மட்டும் ஸ்பூர்த்தியை பார்த்து வந்த ரசிகர்களுக்கு, அந்த படங்கள் வித்தியாசமாக இருந்தது. சீரியலுக்கு இடைவெளி விட்டிருக்கும் ஸ்பூர்த்தி சில வாரங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். மாப்பிள்ளை குறித்த விபரத்தை வெளியிடாத ஸ்பூர்த்தி, அவரின் பின் பக்க படத்தை மட்டும் பதிவிட்டிருந்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”