Archana Harish : சினிமாவிலும் சரி, சீரியலிலும் சரி சில நேரங்களில் மெயின் நடிகைகளை விட, துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் படு ஹிட்டாகி விடுவார்கள். அந்த வகையில் தற்போது இளைஞர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார், துணை நடிகையான அர்ச்சனா ஹரீஷ்.
சீரியலில் பிசியாக நடித்து வரும் இவர், ஆரம்பத்தில் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமானார். தனுஷ் நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான ’திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ’கலகலப்பு’, ’வாலு’, ’வெள்ளைக்கார துரை’, ’ஸ்கெட்ச்’ போன்ற பல்வேறு படங்களில் நடித்து இளசுகளின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர், சீரியலிலும் நடித்து வந்தார்.
Advertisment
Advertisements
தமிழில் ’வாணி ராணி, பொன்னூஞ்சல், அழகி, அருந்ததி, நீலி, வள்ளி, அழகு, பொன்மகள் வந்தாள்’ போன்ற பல்வேறு பிரபலமான தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் தொடர்களில் நடிகை அர்ச்சனா. சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அர்ச்சனா கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்டவர். வேலைக்காக சென்னை வந்த இவர் அங்கேயே குடியேறினார். பின்னர், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஹரி மாறனை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு தான், சினிமா துறைக்கு வந்தார். அர்ச்சனாவின் கணவர், அவரை ஆதரித்து முதுகெலும்பாக செயல்படுகிறார். ஒரு நாள், அர்ச்சனாவின் கணவர் ஹரி தனது கேமராவில் அர்ச்சனாவை வெவ்வேறு கோணங்களில் கிளிக் செய்திருக்கிறார். அந்தப் படங்களைப் பார்த்த ஹரியின் நண்பர், விளம்பரப் படங்களில் நடிக்க அர்ச்சனா ஹரிஷை பரிந்துரைத்தாராம். பின்னர் ஒரு நகைக்கடை விளம்பரத்தின் மூலம் தனது கரியரை தொடங்கியிருக்கிறார்.
அர்ச்சனா ஹரிஷ் செல்லப்பிராணிகளை வெகுவாக விரும்புபவராம். அவர் வீட்டில் இரண்டு அன்பான நாய்களை வைத்திருக்கிறாராம். ஓய்வு நேரத்தை அவர்களுடன் செலவிடுகிறாராம் அர்ச்சனா. அதேபோல ஷாப்பிங் செய்வதிலும் பயங்கர ஈடுபாடு உள்ளவராம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”