Chithi 2 Mahalakshmi : தொகுப்பாளினியாக இருந்து சீரியல், சினிமா என கலக்கியவர்கள் மத்தியில் மகாலட்சுமியும் முக்கியமானவர். சன் மியூஸிக் சேனலில் தொகுப்பாளினியாக தனது கரியரை தொடங்கிய அவர், இன்று சின்னத்திரையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆஸம் ஆத்மிகா, க்யூட் பிரியா பவானி சங்கர்: படத் தொகுப்பு
உண்மையில் தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் மஹாலட்சுமியிடம் இல்லையாம். பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்து, சிறந்த நிறுவனத்தில் பணிபுரிவது தான் அவரது இலக்காக இருந்ததாம். படித்துக் கொண்டிருக்கும் போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரியும் வாய்ப்பு மாகாவுக்கு எதேச்சையாகக் கிடைத்தது. அதை ஒரு பொழுதுபோக்காக நினைத்து ஒப்புக்கொண்ட அவர், படிப்பில் தான் அதிக கவனம் செலுத்தினாராம்.
ஆனால் தொலைக்காட்சியில் தோன்றிய மகாலட்சுமிக்கு எதிர்பார்க்காத அளவுக்கு, ரசிகர்கள் தங்களது ஆதரவை அளித்தனர். இந்தத் திறமையான நடிகையிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கத் தொடங்கினர். அதனால் நிறைய நிகழ்ச்சிகளில் பணிபுரியத் தொடங்கிய மகாலட்சுமி, படிப்படியாக தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இது அவரை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. அவரின் கண்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
மகாலட்சுமி
மகாலட்சுமியின் சின்னத்திரை பயணத்தில் “வாணி ராணி” மிக முக்கியமான ஒன்றாகும். இதில் அவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. ’ஆபிஸ்’, ’ஓரு கை ஓசை’, ‘அரசி’ போன்ற பிற பிரபலமான சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார். சீரியல்கள் ஒவ்வொன்றும் தனக்கு வெவ்வேறு பாத்திரங்களைத் தருகின்றன என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறார் மகா. முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், முன்னணி இயக்குநர்களின் சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது சித்தி 2 சீரியலில் தீபா என்ற கதாபாத்திரத்திரத்தில், ராதிகாவின் மருமகளாக நடித்து வருகிறார்.
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, ’யாரடி நீ மோகினி’ சீரியலில் உடன் நடித்த ஈஸ்வருடன் மகாலட்சுமி நெருக்கமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு, ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ புகார் கிளப்பினார். இந்த விஷயம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் புயலாக கிளம்பியது. அதோடு தனது கணவர் அனிலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், விவாகரத்து வழக்கு நடந்துக் கொண்டிருப்பதாகவும், அப்போதைய நேர்க்காணல்களில் குறிப்பிட்டிருந்தார் மகா. ஆனால், தனக்கு மீண்டும் மகாலட்சுமியுடன் இணைந்து வாழும் ஆசை இருப்பதாகத் தெரிவித்திருந்தார் அவரின் கணவர் அனில். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்தப் பிரச்னைக்குப் பிறகு இவர் மீண்டும் பழையபடி சீரியல்களில் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. ஆனால் அவரோ, எல்லாத்தையும் தூக்குப்போட்டு விட்டு, ‘சித்தி 2’ சீரியலில் அடுத்த அவதாரம் எடுத்தார்.
ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லுதா? மீண்டும் கெளதம் மேனன் இயக்கத்தில் த்ரிஷா
சென்னையில் பிறந்து வளர்ந்த மகாலட்சுமிக்கு சிக்கன் பிரியாணி என்றால் கொள்ளை பிரியமாம். தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விக்ரம் என்பவருக்கு, ‘சேது’ திரைப்படம் ஆல் டைம் ஃபேவரிட்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”