Gayathri Shastry: மெட்டி ஒலி சீரியல் தற்போது கொரோனா லாக்டவுன் காலத்தில் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் சிதம்பரத்தின் 2-வது மகளாக நடித்திருந்தவர் நடிகை காயத்ரி சாஸ்த்திரி. சரோஜா என்ற சரோ கதாபாத்திரத்தில், சேத்தனுக்கு மனைவியாக நடித்திருந்தார்.
கேண்டிட் அஞ்சலி: டிரடிஷனல் நிக்கி கல்ராணி – படத் தொகுப்பு
காயத்ரியின் பூர்விகம் கர்நாடகம். ஆனால், பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில். பெங்களூரில் கல்லூரி படிப்பை முடித்தார். காயத்ரியின் அண்ணன் சஞ்சய். இவரும் நடிகர் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தயாரித்த, ‘வள்ளி’ படத்தில் பிரியா ராமனை காதலித்து ஏமாற்றுவாரே, அவர் தான். ஒரு நாள் அண்ணனின் பேட்டியப் பார்க்க சென்னை வந்திருக்கிறார் காயத்ரி. அவரைப் பார்த்த இயக்குனர் சுரேஷ் மேனன், படத்தில் நடிக்கக் கேட்டிருக்கிறார்.
காயத்ரியும் சரி என்று சொல்லவே, பின் சுரேஷ் மேனன் இயக்கிய ‘பாசமலர்’ படத்தில் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் காயத்ரி. பின்னர் விஜய் - அஜித் இருவரும் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்திலும் நடித்தார். படங்களில் பிஸியான ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும் போதே, குட்டி பத்மினி, ஒரு இந்தி சீரியலில் நடிக்க காயத்ரியை கேட்டுள்ளார். பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘குடும்பம், சாவித்திரி, லட்சியம்’ உட்பட பல சீரியலிலும் நடித்தார். திருமுருகன் டைரக்ஷனில் ஏற்கனவே இரண்டு சீரியல்களில் நடித்திருந்தாலும், அவர் மூன்றாவதாக நடித்த ‘மெட்டி ஒலி’ சீரியல் தான் காயத்ரியை சின்னத்திரை ரசிகர்களுக்கு அடையாளப் படுத்தியது.
சின்னத்திரை இயக்குநர் ரவி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட காயத்ரி, குழந்தை பிறந்ததும் சீரியல்களுக்கு சின்ன இடைவெளி விட்டிருந்தார். தற்போது குழந்தை சற்று வளர்ந்து விட்டதால், சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியலில், கல்பனா என்ற கதாபாத்திரத்தில், ரோஜாவின் மாமியாராக நடித்து வருகிறார்.
”உணவில்லாமல் செத்துவிடுவோம் போல் இருக்கிறது” ரயில் விபத்தில் இறந்த தொழிலாளியின் கடைசி போன் கால்!
காயத்ரிக்கு தென்னிந்திய மற்றும் தாய் உணவுகள் என்றால் அலாதி பிரியமாம். படபிடிப்பு இல்லாத நாட்களில் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”