Tamil Serial News: திரைப்பிரபலங்களில் சிலர் முதல் முயற்சியிலேயே ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட்டு விடுவார்கள். இன்னும் சிலரோ பல சினிமா / சீரியல்களில் நடித்திருந்தாலும், ஏதோ ஒரு தருணத்தில் தான் ரசிகர்களால் அடையாளம் காண படுவார்கள். அந்த வகையில் நடிகை ரம்யா பாண்டியனை போல், மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை அடித்திருக்கிறார் நடிகை தர்ஷா குப்தா.
இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய “முள்ளும் மலரும்” என்ற தொடரில் நடித்து வருகிறார். அதோடு சன் தொலைகாட்சியில் “மின்னலே” என்கிற தொடரிலும், விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் “செந்தூரப்பூவே” என்கிற நாடகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இத்தனை சீரியல்களில் நடித்தாலும் மக்கள் மத்தியில் பெரியதாக பிரபலம் அடையாமல் இருந்தார் தர்ஷா. இதனால் சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை என பல பேர் பயன்படுத்திய யுக்தியை தர்ஷாவும் கையாண்டு உள்ளார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் தர்ஷா, இன்ஸ்டாகிராமில் தனது திறமையைக் காட்ட ஆரம்பித்தார். குறிப்பாக மொட்டைமாடியில் கவர்ச்சியான புடவையில் விதவிதமான படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் உலவ விட்டார். இதன் மூலம் இளசுகளிடம் படு பிரபலமாகியிருக்கிறார் தர்ஷா.
தற்போது தர்ஷாவுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டுமல்லாமல், ட்விட்டரிலும் தீவிர ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள். நடனத்தில் ஆர்வம் கொண்ட இவருக்கு, ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பது என்றால் அலாதி பிரியமாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”