Tamil Serial News: கொரோனா லாக்டவுனில் சீரியல் படபிடிப்பு 3 மாதத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த காலத்தில் பழைய எபிசோட்களை அனைத்து சேனல்களும் ஒளிபரப்பின. தற்போது அரசு அறிவித்திருக்கும் கட்டுபாடுகளுடன் சீரியல் படபிடிப்புகள் மீண்டும் தொடங்கினாலும், பழையபடி நடிகர்களை ஒருங்கிணைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ரசிகர்களுக்கும் தங்களுக்கும் இடையேயான தொடர்பை இன்ஸ்டாகிராம் மூலம் வலுப்படுத்தி வருகிறார்கள் சீரியல் நடிகர்களும், நடிகைகளும். அதில் முக்கியமானவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘சத்யா’ சீரியலின் ஆயிஷா!
சத்யா தொடரில் ’டாம் பாயாக’ நடித்து வருகிறார் ஆயிஷா. இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான`பொன்மகள் வந்தாள்’ சீரியலில் தான் நடித்துக் கொண்டிருந்தார். அந்த சீரியலில் ஆயிஷாவுக்கும், இயக்குனருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக அந்த தொடரில் இருந்து அவர் விலகினார். அதன் பின்பு ’மாயா’ என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார் . அந்த தொடர் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். அந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் ‘சத்யா’ தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஆயிஷா ஆணாக நடித்து பெண்களுக்கு இருக்கும் தனம்பிக்கையை வலுப்படுத்தும் படி நடிக்கிறார்.
கேரளாவில் பிறந்து வளர்ந்த ஆயிஷா, சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். அப்போது தான் அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதல் சீரியலிலேயே, ‘பொன்மகள் வந்தாள் ரோகினி’ என குறிப்பிடும் அளவுக்கு ரசிகர்களிடம் பிரபலமானார். அதன் பின்னர் சன் டிவி-யின் ‘மாயா’, தற்போது ‘சத்யா’ என பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். நீள்வட்ட முகம், இன்னசெண்டான கண்கள் என ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறார்.
ஆயிஷாவுக்கு புத்தகம் படிப்பதும், டான்ஸ் ஆடுவதும், பாடல்கள் கேட்பதும் பிடித்தமான விஷயங்களாம். அதோடு விதவிதமான படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தனது ஃபேன்ஸ்களை என்கேஜ்டாக வைத்துக் கொள்கிறார். நான் வெஜ் பிரியையான ஆயிஷா, சைனீஷ், இத்தாலியன் உணவுகளை ஒரு கை பார்த்து விடுவாராம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”