Advertisment

வசமாக சிக்கிக்கொண்ட கண்ணன்... பழைய சீனா இருந்தாலும் பவர்ஃபுல் தான் போல...

இந்த சீன் பல படங்களில் பார்த்து பழகிய சீன் ஆனால் இதை சீரியலுக்கு நாங்கள் பயன்படுத்துவோம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

author-image
WebDesk
New Update
வசமாக சிக்கிக்கொண்ட கண்ணன்... பழைய சீனா இருந்தாலும் பவர்ஃபுல் தான் போல...

Tamil Serial Pandian Stores Rating Update With Promo :வெளியில போய் சாப்பிடுவதற்கு முன் காசு இருக்கானு பாத்துக்கனும்னு சொல்லுவாங்க... இத பத்தி நெறைய காமெடி சீனே இருக்கு ஆனா நீங்களே அதே சீன வச்சிருக்கீங்க கதைக்கு இந்த சீன் ரொம்ப அவசியமா?

Advertisment

விஜய் டிவியில் குடும்பங்கள் கொண்டாடும் முக்கிய சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். சகோதர பாசம் கூட்டுக்குடும்பத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த சீரியல் இப்போது எதை நோக்கி பயணிக்கிறது என்று கணிக்க முடியாத அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது.

கூட்டுக்குடும்பமாக இருந்த பாண்டியன் ஸ்டோர்சில் கண்ணன் கல்யாணம் பண்ணிக்கிட்டதில் இருந்து ஒரு விறுவிறுப்போ அல்லது பரபரப்போ இல்லாத வகையில்தான் திரைக்கதை சென்று கொண்டிருக்கிறது. ஏதோ வருகிறார்கள் பேசுகிறார்கள் போகிறார்கள் அந்த வகையில் தான் உள்ளது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீது இருந்த எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதற்கிடையே வீடு கட்டுற ப்ளான். முல்லை குழந்தை என்று சற்று பரபரப்பாக சென்றாலும். ரசிகர்களை கவரும் வகையில் எந்த சீனும் இல்லை. இதனிடையே தற்போது திருமணத்திற்கு பிறகு முதல்முறையாக ஐஸ்வர்யாவுடன் வெளியில் வரும் கண்ணன் அடுக்கடுக்காக ஆர்டர் பண்ணி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்

Advertisment
Advertisement

அப்போது ஐஸ்வர்யா வகை வகையா ஆர்டர் பண்ணிருக்கியே இதுக்கெல்லாம் காசு இருக்கா என்று கேட்க. அப்போது பேண்ட் பாக்கெட்டை பார்க்கும் கண்ணன் பர்ஸ் இல்லை என்று சொல்கிறான். அப்போ ஐஸ்வர்யா பர்ஸ் வீட்டில் இருந்ததாக ஐஸ்வர்யா சொல்கிறாள். இதனால் அடுத்து என்ன செய்வது என்று இருவரும் யோசித்துக்கொண்டிருக்க ப்ரமோ முடிவடைகிறது.

இந்த சீன் பல படங்களில் பார்த்து பழகிய சீன் ஆனால் இதை சீரியலுக்கு நாங்கள் பயன்படுத்துவோம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். சற்று காமெடியாக இருந்தாலும் பழைய காட்சிகள் என்பதால் சுவாரஸ்யம் இல்லாமல் போய் விட்டது. சாகோதர பாசத்திற்கு பெயர் பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இப்போது பாசம் இருக்கிறதா என்று யோசிக்க வைத்துள்ளது திரைக்கதை.

மேலும் இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் குடும்பத்துடன் சேர்த்து பார்க்கின்ற இந்த நாடகம் முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது கதிர் முல்லை சீன் எல்லாம் ரொம்ப டிராமா மாதிரி இருக்கு. பாக்கவே சகிக்கல. தயவுசெய்து சீக்கிரம் முல்லைக்கு குழந்தை பிறக்க வைக்கவும் என தங்களது கருத்துக்களை கூறி வருகினறனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Vijaytv Serial Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment