தமிழ் மொழி..தமிழர்களுக்கு மிகவும் பிடித்தமான மொழி மட்டுமில்லை தமிழ் வரலாற்றை படித்த ஒவ்வொருவரையும் அதிகம் பிடிக்க வைக்கும் மொழியும் கூட. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி எதுவென்றால் அது தமிழ்நாடு என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் தமிழ்நாட்டை தவிர தமிழர்கள் அதிகம் எங்கு வாழ்கின்றனர்? என்று கேட்டால் உங்களால் சொல்ல முடியுமா?
அது எப்படி முடியும்? தமிழர்கள் என்ன கூண்டு பறவையா? சுற்றி சுற்றி ஒரே இடத்தில் இருக்க. நாடு விட்டு நாடு.. கண்டம் விட்டு கண்டம்னு பறந்துகிட்டு இருக்காங்க.. படிப்பாகவும், வேலைக்காவும் , குடும்ப சூழ்நிலை காரணமாக எவ்வளவோ தமிழர்கள் சொந்த ஊரைவிட்டு வேறு மாநிலங்களுக்கு சென்று பொழப்பு நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ்நாட்டை தவிர தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற மாநிலம் குறித்து புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்த புள்ளி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. புள்ளி பட்டியலை கண்டு பலரும் அதிர்ச்சியும் அடைந்துள்ளன. ஆம் முதல் இடத்தில் இருப்பது கர்நாடகா மாநிலம் தான்.புள்ளி கணக்கிடுப்படி கர்நாடகாவில் அதிகபட்சமாக 21.10.128 தமிழர்கள் வசிக்கின்றனர்.
அண்டை மாநிலமான கர்நாடகாவுடன் நடந்து வரும் காவிரி பிரச்சனை நாடு அறிந்த ஒன்று. ஆனால் அதே கர்நாடகாவில் தான் அதிகமான தமிழர்களும் வாழ்ந்து வருவது தான் பலரையும் வியக்க வைத்துள்ள செய்தி. இந்த புள்ளி பட்டியலில் தமிழ்நாட்டை தாண்டி வேறு எந்த மாநிலங்களில் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்று கணக்கீடும் வெளியாகியுள்ளது. இதோ அதன் முழு விபரம்.
1. கேரளா - 502516
2. மகாராஷ்டிரா -509887
3. ஆந்திரா - 713848
4. புதுச்சேரி- 1100976
5. டெல்லி - 82719