சன்.டி.வியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் பூவரசி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராதிகா ப்ரீத்தி. கர்நாடகாவிலேயே பிறந்து வளர்ந்தவர். பெங்களூருவில்தான் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். இவர் அடிப்படையில் ஒரு ஸ்போர்ட்ஸ் ப்ளேயர். தேசிய அளவில் 5 முறை த்ரோபால் விளையாடி இருக்கிறார். மாநில அளவில் பேட்மின்டனும் மாவட்ட அளவில் வாலிபாலும் விளையாடி உள்ளார். ராதிகாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருந்துள்ளது. இவர் முதன்முதலில் கன்னட சினிமாவில்தான் நடிக்க தொடங்கினார்.
2018ஆம் ஆண்டு ராதிகா நடித்த ‘Raja Loves Radhe’ என்ற கன்னடப் படம் கர்நாடகாவில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அதன்பிறகு 2019ல் ‘எம்பிரான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் அவரது சொந்த குரலில் தான் நடித்திருந்தாராம். பிறகு Adi Oka Idile என்ற கன்னட படத்தில் நடித்தார். பெரியத்திரையில் நடித்துக்கொண்டிருந்தவருக்கு அங்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரைக்குள் நுழைந்தார். சன்டிவி சீரியல் பூவே உனக்காக மூலம் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார் ராதிகா ப்ரீத்தி. இந்த சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. கதிர் மற்றும் பூவரசிக்கு இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ராதிகாவின் நடிப்புக்கு தனி ஃபேன்ஸ்தான்.
ராதிகாவின் அப்பா கர்நாடகா அம்மா தமிழ்நாடு. இதனால் தமிழ் கற்றுக்கொண்டு நன்றாக தமிழ் பேசுகிறார். மாடர்ன் பெண் கேரக்டரில் நடித்தாலும் கிளாமராக நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளாராம். திரைப்படங்களில், சீரியல்களில் கிராமத்து பெண் கேரக்டர்கள் என்றால் விரும்பி நடிப்பாராம்.. தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளிலும் நல்ல நடிகை என பெயர் வாங்க வேண்டும் என்பதே ராதிகாவின் ஆசையாம்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா ஷூட்டிங் ஸ்பார்ட்டில் எடுக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை தனது இன்ஸடாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். நல்ல கதை அமைந்தால் மீண்டும் வெள்ளித்திரையில் நடிப்பாராம் ராதிகா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.