சன்டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலுக்கு ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வரும் இந்த சீரியல் சமீபத்தில் தான் 800 எபிசோடுகளை கடந்து இருந்தது. இந்த சீரியலில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சிபு சூர்யன். பெங்களூருவை சேர்ந்த இவர் பொறியியல் படித்துள்ளார். இவர் கல்லூரி படித்துக்கொண்டிருக்கும்போதே பார்ப்பதற்கு ஹீரோ மாதிரி இருப்பதால் ஆக்டிங் ட்ரை பண்ணு என நண்பர்கள் உசுப்பேற்றியுள்ளனர். அதையெல்லாம் விளையாட்டாக எண்ணி படித்து முடித்து வேலைக்கும் செல்ல ஆரம்பித்தார். அதன்பிறகு ஒரு நாள் காபி ஷாப்பில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது கன்னட சீரியல் ரைட்டர் ஒருவர் தனது போன் நம்பரை அர்ஜூனிடம் கொடுத்து ஆபிஸ் வந்து பார்க்குமாறு கூறியுள்ளார். சரி முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்து அங்கு சென்றபோது சீரியல் ஆடிஷன் நடந்துகொண்டிருந்தது. டைலாக் படிக்க சொல்லி அர்ஜூனிடம் கூறியுள்ளனர். ஆரம்பத்தில் தயங்கியவர் பின்னர் நடித்து செலக்ட்டும் ஆனார்.
Advertisment
முதன் முதலாக கன்னட சின்னத்திரையில் ராதா ரமணா என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார். கூடவே மாடலிங் பண்ண ஆரம்பித்தார். முதல் சீரியலுக்கே ரசிகர்களிடம் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகள். அந்த தொடரில் பள்ளி ஆசிரியராகவும் ஃபோட்டோகிராபராகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். உற்சாகமான அவர் அடுத்தடுத்த சீரியல்களில் நடிக்க தொடங்கினார். சிபு தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக் கூடியவர். கன்னட சீரியல்களில் நடித்துகொண்டிருந்த போது தமிழ் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. தமிழ் தெரியாவிட்டாலும், தமிழ் சீரியல்களில் நடிக்க விருப்பம் இருந்ததால் ரோஜா வாய்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். ரோஜா சீரியலில் lawyer ஆக நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருடன் நடித்து வரும் பிரியங்கா நல்காரியுடன் இவர் பண்ணும் ரொமன்ஸ் சீன்களுக்கே தனி ஃபேன்ஸ். எப்போதும் மனைவிக்கு துணையாக நிற்கும் கணவனாக நடிப்பில் கலக்கியிருக்கிறார். பல சுவாரசிய திருப்புமுனைகளுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
Advertisment
Advertisements
தமிழ், கன்னடம் தாண்டி ஹிந்தி சீரியல்களில் நடித்து வருகிறார். பல மொழி சீரியல்களிலும் ஹீரோவாக நடிக்கும் இவருக்கு ஸ்டைலிஷ் வில்லனாக நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். சின்னத்திரையில் கிடைத்த வெற்றியால் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் சிபு. இசையமைப்பாளர்-இயக்குனர் ஹம்சலேகா இயக்கும் சகுந்தலா என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். தமிழிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு இன்ஸ்டாவில் ஏகப்பட்ட ஃபரப்போஸல் வருகிறதாம். படங்களில் நடிக்க தொடங்கியதால் புதிய சீரியல்களில் ஏதும் அவர் நடிப்பதாக இல்லை. ரோஜா சீரியலே அவர் கடைசி சீரியல் என கூறும் சிபு திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கும் எண்ணத்தில் பெரியத்திரை நோக்கிய பயணத்தை தொடங்கி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"