/indian-express-tamil/media/media_files/tirupathi-3.jpg)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவதால், தரிசனத்திற்கு 22-24 மணி நேரம் ஆவ்வதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
இந்தியாவில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும், கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். சாதாரன நாட்களில் கூட பக்தர்கள் அதிகமாக காணப்படும் இந்த கோவிலில் பண்டிகை நாட்களில், லட்சக்கணக்கில் பக்தர்கள் பெருமாளை தரிசிக்க அணிவகுத்து வருவது வழக்கம். இப்படி ஒரே நேரத்தில் லட்ச கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வரும்போது, தரிசனத்திற்கான நேரம் அதிகமாவது அவ்வப்போது நடைபெறும்.
அந்த வகையில் தற்போது திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதால், தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நேற்று (ஆகஸ்ட் 14)மொத்தம் 66,530 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில், 32,478 பேர் மொட்டை அடித்துக் கொண்ட நிலையில், நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ 4.66 கோடி சேர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியள்ளது.
திருப்பதி கோவில்ல புகழ்பெற்ற சர்வ தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வந்ததால், தரிசனம் செய்ய, 20- 24 மணி நேரம் ஆனதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி சிலாதோரணம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனத்திற்காக சென்றுள்ளனர். இதில் ரூ300 சிறப்பு தரிசனத்திற்காக சென்றவர்கள், 5 மணி நேரத்திற்கு மேல் தரிசனத்திற்காக காத்திருந்துள்ளனர்.
அதேபோல் நடைபாதையாக வந்த பக்தர்கள் 8-10 மணி நேரமும், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசன ஷெட்யூலில் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை தரிசனத்திற்காக காத்திருந்தனர். திருப்பதிக்கு சிறப்பு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், 3 மாதங்களுக்கு முன்பே ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் புக்கிங் செய்ய வேண்டியது அவசியம். இதற்கான டிக்கெட் முன்பதிவு மாதந்தோறும் 24 ஆம் தேதி தொடங்கும். இந்த தேதி மாறுதலுக்கு உட்பட்டதாகவும். இதனிடையே டோக்கன் இல்லாமல் வரும் பக்தர்கள், நேரடியாக லைனில் நிற்காமல், மண்டபத்தில் தங்கிவிட்டு நாளை தரிசனத்திற்கான லைனில் நிற்கலாம் என்று தேவஸ்தானம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
ரூ300 சிறப்பு தரிசனத்தில், ஒரு அக்கவுன்ட்டில் 6 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்யலாம். அதேபோல் எக்ஸ்ட்ரா லட்டு தேவை என்றால் அதற்காக தனியாக பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக கொண்டு டிக்கெட் புக் செய்யலாம். அறைகளை புக் செய்ய அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு புக்கிங் ஸ்லாட் திறக்கப்படும். அதில் புக் செய்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.