உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கொண்டாடும் முக்கிய பண்டிகை பொங்கல் திருநாள். ஆண்டுதோறும் ஜனவரி 15-ந் தேதி கொண்டாடப்படும் இந்த பண்டிகையில், மார்கழி கடைசி நாள் போகி பண்டிகை, தை முதல் நாள் சூரியன் பொங்கல், 2-வது நாள் மாட்டு பொங்கல், 3-வது நாள் காணும் பொங்கல் என தொடர்ந்து 4-நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும் இந்த பொங்கல் திருநாள் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் முக்கியமானதாகும்.
இந்த பொங்கல் திருநாளில் புதிதாக அறுவடை செய்த நெல்லில் அரிசி எடுத்து முதல் நாளில் சூரியபகவானுக்கும், 2-வது நாளில் விவசாயத்திற்கு முக்கிய பங்காற்றும் கால்நடைகளுக்கும் படைத்து வழிபாடு செய்வது வழக்கம். அதேபோல் இந்த பொங்கல் திருநாளில் அனைத்து நாட்களும், தங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்து செய்திகள் சொல்வது, அனைவரும் இணைந்து பொங்கல் கொண்டாடுவது என மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நாட்களாக உள்ளது.
மகிழ்ச்சியில் உச்சம் என்று சொல்லும்போது அதில் நகைச்சுவை இல்லை என்றால் எப்படி? தை 2-வது நாள் கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல் நிகழ்வை வைத்து பலரும் தங்களது நண்பர்களை கலாய்த்து மகிழ்வது வழக்கமான நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று. அந்த வகையில் இந்த வருடமும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை ஜாலியா கிண்டல் செய்வதற்கு ஏற்ற மாட்டுப்பொங்கல் புகைப்படங்களை இங்கு பார்ப்போம்.
இதில் குறிப்பாக, எனக்கு பொங்கலே வேண்டாம் என்று கவுண்டமணி சொல்வதும், தனது ஓவியத்தை பார்த்து மாடு தற்கொலை செய்துகோள்வது போலவும், பீட்டாவிடம் இருந்து மாட்டை காப்பாற்றிவிட்டோம் கோலம் போடும் பெண்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பது போலவும் இருக்கும் மீம்ஸ்கள் பெரும் சிரிப்பை வரவழைக்கின்றன.