VJ Manimegalai : நீண்ட நாட்களாக சின்னத்திரையில் இருக்கும் தொகுப்பாளர்கள் மத்தியில் வி.ஜே.மணிமேகலையும் முக்கியமானவர்.
கோயம்புத்தூரை சேர்ந்த மணிமேகலை, சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ பயின்றார். இதைப்பற்றி ஒரு நேர்க்காணலில், ”வீட்டிலிருந்து முதல் எதிர்ப்பு குரலோடு என் பயணம் ஆரம்பிச்சது. எனக்குச் சொந்த ஊர் கோயம்புத்தூராக இருந்தாலும், வளர்ந்ததெல்லாம் சென்னைதான். விஸ்காம் படிக்க ஆசைப்பட்டேன். 'அந்த கோர்ஸ் படிச்சு என்ன பண்ணப் போறேன்'னு பெற்றோர் சிகப்புக் கொடி காட்டினாங்க. அந்தக் கோபத்தில் வீட்டிலேயே ஒரு மாசம் உட்கார்ந்திருந்தேன்.
லட்சுமி ஸ்டோர்ஸ்: சீரியல் டூ சினிமா ஹீரோயின் நக்ஷத்ரா
பட்டிமன்றத்தில் பேசிய போது..
கழுத்தைப் பிடிச்சு தள்ளாத குறையா ஒரு காலேஜிக்கு இழுத்துட்டுப் போனாங்க. அங்கே பி.எஸ்ஸி மேத்ஸ் குரூப் மட்டுமே காலியாக இருந்துச்சு. சரி போகட்டும்னு சேர்ந்துட்டேன். முதல் வருஷம் படிக்கிறப்போ, சன் மியூசிக் சேனலின் ஆங்கர் வாய்ப்புக்கு நானும் ஃப்ரெண்ட்ஸ் பலரும் அப்ளை பண்ணினோம். எனக்கு மட்டும் ஆடிஷன் அழைப்பு வர, கெத்தாகப் போய் செலக்ட் ஆகிட்டேன். 'ஏற்கெனவே படிப்புல சுமார். இந்த லட்சணத்துல ஆங்கரா?' வீட்டுல திட்டினாங்க. அதையெல்லாம் சமாளிச்சுதான் என் ஆங்கர் பயணத்தை ஆரம்பிச்சேன்.” என்று குறிப்பிட்டிருந்தார் மணி.
சன் மியூசிக்கில் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தையடுத்து அங்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பிராங்கா சொல்லட்டா , ஃபீரியா விடு, ஹாட் சீட், ஒ.மை.காட், பிளாக், வெட்டி பேச்சு மற்றும் கோலிவுட் டைரீஸ் ஆகிய நிகழ்ச்சிகளை அவர் கலக்கலாக தொகுத்து வழங்கினார்.
கணவர் ஹுஸைனுடன்...
பின்னர் டான்ஸ் கொரியோகிராபரான ஹுசைனுக்கும் மணிமேகலைக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்திற்கு மணிமேகலையின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், வேறு வழியின்றி நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் பதிவு செய்து கொண்டனர். அதன் பின்னர் 2019-ல் விஜய் டிவி நடத்திய ’மிஸ்டர் அண்ட் மிஸஸ்’ சின்னத்திரை எனும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்க மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஹுசைன் இயல்பில் நடன இயக்குனர் என்பதால் மணிமேகலைக்கு பிரச்சினை ஏதும் இல்லாமல் நடன முறைகளை அவரது கணவரே கற்றுத்தந்து தன்னுடன் ஆட வைத்தார். அந்த நிகழ்ச்சி இவர்களுக்கு ஒரு நல்ல பெயரைத் தேடித் தந்தது.
’அடுத்தவர் கணவரை திருடிய நயன்தாராவை எங்கு பார்த்தாலும் உதைப்பேன்’ – பிரபுதேவா மனைவி ஆவேசம்
விஜய் டிவி நிகழ்ச்சியின் போது
இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவி-யிலேயே ஐக்கியமாகி விட்டார் மணிமேகலை. அவருக்கு பிடித்த விளையாட்டு என்ன்வென்று கேட்டால், அப்படியெல்லாம் ஒண்ணுமே இல்லைங்க. டான்ஸ் ஆடுவேன், ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுவேன் என்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”