சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர், நடிகைகளின் பார்த்திடாத திருமண புகைப்படங்கள்!

இவருக்கு திருமணம் ஆன தகவல் கூட அவ்வளவாக தெரியாது.

By: Updated: August 29, 2019, 01:45:41 PM

tamil tv serial actress marriage photos : சினிமாவை விட நமக்கு அதிக நெருக்கம் சின்னத்திரை தான். தினமும் டிவி சீரியல்களை பார்க்காவிட்டால் தலையே சிலருக்கு வெடித்து விடும். சிலர் சீரியல் கதை மிகவும் பிடித்து போக குடும்ப தொடராக இருந்தால் அதிகம் விரும்பி பார்ப்பார்கள். சிலர் விருவிருப்பாகவும் வித்யாசமான தொடர் என்றால் விரும்புவார்கள்.

மேலும் சிலர் ராதிகா, தேவையானி, சுகன்யா, குஷ்பு போன்ற சினிமா பிரபலங்கள் நடிக்கும் சீரியல்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அதிலும் மாமியார், மருமகள் கதை என்றால் கேட்கவே வேண்டாம். கதையில் வருவருபவர்கள் உண்மையான கணவர் மனைவி, மருமகள் என நினைத்துக் கொண்டு அவர்களுக்காக வருத்தப்படுவார்கள் அழுவார்கள் திட்டுவார்கள். இப்படி சீரியல் பிரியர்களுக்காக தான் இந்த வித்யாசமான செய்தி தொகுப்பு.

டிவி சீரியல் நடிகர், நடிகைகளின் திருமண புகைப்படங்கள் கலக்‌ஷன்ஸ்

1. நடிகை விஜயலட்சுமி

பெரிய திரையில் இருந்து சின்னத்திரை பக்கம் வந்து நாயகி மெகா தொடரின் மூலம் அனைவரின் இல்லங்களிலும் ஒருவரானார். இவரின் திருமணம் இந்து முறைப்படி மிக மிக அழகாக நடைப்பெற்றது.

2. சன் மியூசிக் தியா:

சன் மியூசிக் விஜே தியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இவர் பீக்கில் இருந்த போதே கார்த்திக் என்பவரை காதலித்து கரம் பிடித்தார். இவரின் திருமண புகைப்படங்கள் எப்போதுமே இணையத்தில் வைரல் தான்.

3. ஆனந்தி

விஜய் டிவி ஆனந்தி என்றால் தெரியாதவர்களே இல்லை. ஜோடி மூலம் இவருக்கு நடனதுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். சில படங்களிலும் நடித்துள்ளார்.

4. அனு

கனா காலங்கள் மூலம் பிரபலமான அனுவின் திருமண புகைப்படங்கள் இதுதான். பலருக்கு இவருக்கு திருமணம் ஆன தகவல் கூட அவ்வளவாக தெரியாது.

5. பிரியங்கா

சிரிப்பு அழகி பிரியங்கா, பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவரின் திருமணத்திற்கு சினிமா பிரபலக்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர்.

6. கல்யாணி

குழந்தை நட்சத்திரமான கல்யாணி, சில ஆண்டுகள் முன்பு மருத்துவர் ஒருவரை கரம் பிடித்தார். கேரள முறைப்படி இவர்களது திருமணம் நடைப்பெற்றது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Tamil tv serial actress marriage photos serial actress marriage photos

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X